அரசாங்கத்திற்கு எதிரான இணைய தளங்களை முடக்குவதற்கு திட்டம்..!
அரசாங்கத்திற்கு எதிரான இணைய தளங்களை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தினையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் விமர்சனம் செய்யும் இணைய தளங்களே இவ்வாறு முடக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
மலையக மக்கள் முன்னணி, தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது..!
மலையக மக்கள் முன்னணி, தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அறிவித்துள்ளது. சாந்தினி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்க ஆர்வம் காட்டி...
மன்னார் மாவட்டத்தில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படவில்லை என முறைப்பாடு..!
மன்னார் மாவட்டத்தில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பிரதேசத்திற்கு சென்றுள்ள சிங்கள குடும்பங்களுக்கு இதுவரையில் மீள் குடியேறுவதற்கு உசிதமான காணிகள் வழங்கப்படவில்லை என...
இலங்கைத் தமிழ் அகதிகளின் வருகையில் வீழ்ச்சி–தமிழக காவல்துறையினர்..!
இலங்கைத் தமிழ் அகதிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கடந்தக காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவான எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழ் அகதிகளே தமிழகத்தில் அடைக்கலம் கோருவதாக தமிழக காவல்துறை...
ரஷ்யாவில் இரு எரிமலைகள் வெடிப்பு 33,000 அடி உயரத்தில் புகைமூட்டம்..!
ரஷ்யாவின் கிழக்கிலுள்ள கம்சட்கா குடாவில் உள்ள இரண்டு எரிமலைகள் நேற்று வெடித்துச் சிதறின. எரிமலைகள் கக்கிய புகை மற்றும் சாம்பல் காரணமாக பல விமானங்களை மாற்று வழியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. மேலும் அண்மையில்...
பிரபாகரனின் சகோதர, சகோதரிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிவாஜிலிங்கம் அழைப்பு..!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேவலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதர,சகோதரிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது வல்வெட்டித்துரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...
வடக்கு கிழக்கு மக்கள் காணி உறுதிகளை சமர்பிக்காது கடனுதவி பெற்றுக்கொள்வதற்கான விசேட சட்டவிதிகளை அமுல்படுத்த நடவடிக்கை‐மத்திய வங்கி..!
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது காணி உறுதிகளை சமர்பிக்காது, கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான விசேட சட்டவிதிகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் பிரதேசத்தில் உள்ள நிதி...
மதுபானங்களின் விலை அதிகரிப்பு..!
நாட்டில் மதுபானங்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
இருவேறுபட்ட கொள்கைகளை ஐ.நா. சபை கடைப்பிடிக்கின்றது-கெஹெலிய ரம்புக்வெல..!
ஐக்கிய நாடுகள் சபையானது பிரிட்டன் மற்றும் எமது நாடு தொடர்பில் இரு வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.எமது நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம்...
ரஜினியின் அடுத்த நாயகி வித்யா பாலன்..!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் தி வாரியர் தலைப்பு ஹரா என்று மாற்றப்பட்டுள்ளது. தன் மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இதனால், சுல்தான் என்கிற ஹராவின்...
இராணுவப் படையணிகள் தமிழ் மக்களுக்காக 1700 வீடுகளை அமைத்து வழங்கியுள்ளனர்‐திவயின..!
வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் இயங்கும் இராணுவப் படையணிகள் தமிழ் மக்களுக்காக 1700 வீடுகளை அமைத்து அதனை வழங்கியுள்ளனர். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த வீடுகள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன....
ஜனாதிபதியின் பதிலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருக்கின்றது..!
பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி பதிலுக்காக காத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த விஜயத்திற்கு முன்னர் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த்...
விக்ரம் அனுஷ்கா ஜோடி சேரும் தெய்வ மகன்..!
மதராஸபட்டினம் புகழ் விஜய் இயக்க, விக்ரம் அனுஷ்கா முதல்முறையாக ஜோடி சேரும் தெய்வ மகன் படப்பிடிப்பு துவஙகியது. அனுஷ்காவின் உயரமும், வாளிப்பான உடலமைப்பும்தான் அவரது ப்ளஸ் என்பதால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தமிழிலோ...
தளபதி பாதிப்பில் பேசியதுதான் அந்த நண்பேன்டா வசனம்-சந்தானம்..!
பாஸ் என்கிற பாஸ்கரனின் இரண்டாவது ஹீரோ எனும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தவர் சந்தானம். கவுண்டரின் ஸ்டைலில் அவர் அடித்த கமெண்டுகளுக்கு தியேட்டர் கூரையே அதிருமளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறக்கிறது. இந்த எந்திரன் சுனாமியிலும் சற்று...
நமீதாவைக் கடத்த முயன்ற கார் டிரைவர்..!
நடிகை நமீதாவை காரில் கடத்த முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார். தமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார். சமீபத்தில்...
புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததை இந்திய அரசு முதற்தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளது..!
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதை முதல் தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசு இதுவரை இறப்புச் சான்றிதழ் எதையும் அனுப்பவில்லை. மாறாக, பிரபாகரன் இறந்துவிட்டார்...
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்ட பரிந்துரைகள் டிசம்பர் மாதம் முன்வைக்கப்படும்‐சிவாஜிலிங்கம்..!
தேசிய இனப்பிரச்சினைக்கான தமிழ் அரசியல் கட்சிகளின் தீர்வுத் திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் முன்வைக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் பத்து...
வடக்கில் தமிழ் மக்களினால் புதைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தினூடாக உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது‐ஜெனரல் உபய மெதவல..!
வடக்கில் தமிழ் மக்களினால் புதைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணத் தொகை காவற்துறையினரால் மீட்கப்பட்டு, நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டு, பின்னர், அவை உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். (more…)
இலங்கை மக்களின் சராசரி ஆயுட் காலம 74 ஆக உயர்வு..!
இலங்கை மக்களின் சராசரி ஆயுட் காலம் 74 ஆக உயர்வடைந்துள்ளதென சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இலங்கை மக்களின் ஆயுட் காலம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம்..!
மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டங்களை வழங்குவதற்காக இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர்...
எரி பொருட்களுக்கான விலை வீழ்ச்சியடையக் கூடும்..!
எரி பொருட்களுக்கான விலை வீழ்ச்சியடைக் கூடுமென பெற்றோலிய வள அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களில் எரிபொருளுக்கான விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து நேரடியாக கொள்வனவு...
பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் அடுத்த நகர்விற்காக காத்திருக்கின்றது..!
சர்ச்சைக்குரிய 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட பாராளுமன்றப் பேரவை, ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்விற்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பெயர்களை ஜனாதிபதி பரிந்துரை செய்தால் மட்டுமே பாராளுமன்றப் பேரவையின்...
இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும்-சஜித் பிரேமதாஸ..!
இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனை சந்தித்து பேச்சுவார்த்தை...
போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்தும் பிரச்சாரங்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சுமார் மூன்று மில்லியன் பவுண்கள் வழங்கப்பட்டுள்ளது..!
போருக்குப் பின்னரான சிறிலங்கா அரசாங்கத்தின் நன்மதிப்பை உயர்த்தும் பொருட்டு அதற்கு வேண்டிய பிரச்சாரங்களை மேற்கொள்ளுமுகமாக பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் சுமார் மூன்று மில்லியன் பவுண்களை (4.7 மில்லியன் டொலர்) வழங்கியுள்ளது...
2 சூரியன்களுடன் கிரகங்கள்..!
ஹாலிவுட் திரைப்படமான "ஸ்டார் வார்ஸ் எ நியூ ஹோப்"பில் இரண்டு சூரியன்கள் உள்ள கிரகங்கள் இருப்பதாக கற்பனையாக கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்போது அது உண்மையாகி விட்டது. இரண்டு சூரியன்கள் உள்ள கிரகங்களை அமெரிக்காவில் உள்ள...
உலகில் மிக வயதான நபர் நானே:காஷ்மீர் முதியவர்..!
உலகிலேயே மிகவும் வயதான நபராக தன்னை அறிவிக்கக் கோரி, ஜம்மு- காஷ்மீரில் வசிக்கும் ஜூம்மா கான் என்ற முதியவர், அரசிடம் மனு அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லையில் உள்ள போடா கிராமத்தில்...
மெனிக்பார்மில் நீர்வளம் மிக்க செழுமையான பகுதியில் இராணுவ முகாம்..!
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த மெனிக்பார்மில் நீர்வளம் மிக்க செழுமையான பகுதியில் இராணுவம் தற்போது முகாமிட்டுள்ளதாக எமக்கு அறியகிடைத்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வலையம்...
விடுதலைப் புலிகளுடன் தொடர்பை பேணிய மூவர் தலவாக்கலையில் கைது..!
தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ஒருவரையும், அவருடன் தொடர்புடைய இருவரையும் மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று நுவரெலியா தலவாக்கலை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கண்டியில்...
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
இலங்கையில் நிலவும் அமையான சூழலை அடுத்து இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்றவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய இணையத்தலம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா. வின் புள்ளிவிபரவியல் அறிக்கையில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக...
அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் சிறைத் தண்டனை அனுபவிக்க தயாராக வேண்டும் ‐ சரத் என் சில்வா..!
அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் சிறைத்தண்டனை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டுமென பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்‐டியூ.குணசேகர..!
ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 23 முன்னாள் பெண் விடுதலைப் புலி போராளிகளை அவர்களது குடும்பங்களுடன்...
கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது..!
கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மற்றும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. (more…)
சந்திரிக்கா படுகொலை முயற்சியுடன் தொடர்புடைய புலி உறுப்பினருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளது..!.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குரதுங்க படுகொலை முயற்சியுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி குறித்த நபருக்கான தண்டனையை நீதிமன்றம்...
மன்னாரில் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்..!(பட இணைப்பு)
மன்னார் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தமிழ்ச் செம்மொழி விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறுகின்றது. இவ்விழா மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார்...
ரணில் விக்ரமசிங்க- எரிக் சொல்ஹெம் சந்திப்பு..!
நோர்வேக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் எரிக் சொல்ஹேமை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை ரணில் விக்கிரமசிங்க கன்சவேட்டிவ் கட்சியினரையும் மற்றும் சர்வதேச ஜனநாயக சங்க...
அனுஷ்காவுக்காக… விக்ரம், ஆர்யா வெயிட்டிங்..!
ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதன்பிறகு சிறிதுகாலம் கோலிவுட்டிற்கு வராமலிருந்த அனுஷ்காவை வேட்டைக்காரன் மூலமாக அழைத்துவந்தார்கள். வேட்டைக்காரனை தொடர்ந்து சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா,...
யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட நகைகளை ஒப்படைக்க வேண்டும்-மனோகணேசன்..!
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட அரசு மற்றும் இராணுவத்தினரால் நகைகளை, மீண்டும் நகைகளின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளார்....
டுபாயில் நிர்க்கதியான 68 பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்..!
டுபாயில் நிர்க்கதி நிலைக்குள்ளாகிய 68 இலங்கை பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமாநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். (more…)