விடுதலைப்புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் கைது
விடுதலைப்பலிகளின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு தண்டனை வழங்கப்படாத நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்
ஊடகவியலாளர் படுகொலைச் சம்பவங்களுக்கு தண்டனை வழங்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் படுகொலை சம்பவங்களுக்கு தண்டணை வழங்காத நாடுகளின் வரிசையில் ஈராக் முன்னிலை வகிக்கிறது என நியூயோர்க்கை மையமாக கொண்டியங்கும் ஊடகவியலாளர்களைப்...
எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரதும் உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்-ரணில்
அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான...
75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு
உரிய அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சுமார் 75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக கொண்டுவர முயற்சிக்கப்பட்ட வேளையில் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப் பயணிகளின்...
இலங்கை மருத்துவருக்கு நியுஸிலாந்தில் கௌரவிப்பு
இலங்கையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் நியுசிலாந்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார் நாகலிங்கம் ராசலிங்கம் என்ற 73வயதான மருத்துவரே இவ்வாறு நியுஸிலாந்து அதிகாரிகளினால் கௌரவிக்கப்பட்டுள்ளார் அகதிகள் மற்றும் புலம்பெயர் சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் நோக்கில் நியுஸிலாந்து...
ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகத் தீர்மானம்
ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்;. ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலுக்கு முன்பு வழங்கியிருந்த உறுதிமொழிக்கமைய தேசியப்பட்டியல் ஆசனமொன்றை...
ரிஎம்விபியின் மட்டு உள்ளுராட்சி மன்றங்களில் நிர்வாக மோசடிகள்..
சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி நடத்திவரும் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மற்றும் நிர்வாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடுகள், அரச வாகன...
மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா
இந்நாட்டில் மாறுபட்ட கருத்துடையவர்கள் மாறுபட்ட சிந்தனையுடையவர்கள் பலர் இருக்கலாம் அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் எனக்கூறி கைதுசெய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று தெரிவித்தார். 7வது நாடாளுமன்ற முதலாவது அமர்வு இன்று...
ருக்மன் சேனாநாயக்க கட்சித் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார்
ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் ருக்மன் சேனாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரன் என்பது குறிப்பிடதக்கது. ஐக்கிய...
புதிய அரசாங்க அமைச்சரவை நாளை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் நாளை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெறவுள்ளது இந்தமுறை 40க்கம் குறைவான அமைச்சர்களே அமைச்சர்கள் குழுவில் இடம்பெறுவார்கள் என அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன கடந்த அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுக்கள்...
இலங்கை பிரதமராக ஜெயரத்னே பதவியேற்பு- சபாநாயகர் ராஜபக்சே அண்ணன்
ராஜபக்சேவின் தீவிர விசவாசியும், இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.எம்.ஜெயரத்னே, இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார். அதேபோல சபாநாயகராக ராஜபக்சேவின் அண்ணன் சமல் ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். சுதந்திராக் கட்சியில் ராஜபக்சேவுக்கு அடுத்த நிலையில்...
வன்னிக்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் கைது..
போலியான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வன்னிக்கு நுழையமுற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் நேற்றுமாலை வவுனியா- தாண்டிக்குளம் சோதனை சாவடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியாவிலிருந்து ஆட்டோவில் பயணித்த இவர் விசாரணையின் பொருட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இரகசிய...
பார்வதி அம்மையாரை வைத்து ஈழ ஆதரவு பிரசாரம் செய்ய திட்டமிட்டோமா? -வைகோ மறுப்பு
பார்வதி அம்மையாரை வைத்து தமிழ் ஈழ ஆதரவு பிரசாரம் செய்யும் எண்ணம் துளி அளவும் எங்களுக்கு இல்லை. இதை நான் இந்த தமிழ் மண்ணில் ஆணையிட்டு சொல்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...
நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை.. -காட்டிக் கொடுத்த செல்போன்!
கடந்த 45 நாட்களாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை செல்போன் தான் காட்டிக் கொடுத்துள்ளது. 32 வயதான நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் லீலைகளில் ஈடுபட்ட வீடியோ வெளியானதையடுத்து தலைமறைவானார். அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்திய...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பூட்டானுக்கான விஜயம்..
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை பூட்டானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சரவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். பூட்டானில் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகும்...
சவூதி அரேபியாவின் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்துள்ளவர்களிடையே மோதல், இலங்கையர் பலி
சவூதி அரேபியாவின் ஜேடார் கந்தஹார் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்து இருப்பவர்களிடையே இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியப் பிரஜைகளுக்கும் இலங்கையர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி அது கொலையில் முடிந்துள்ளதாக ஜேடார் நகரிலுள்ள இலங்கைத்...
சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர் தெரிவு, எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்
ஏழாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சமல் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டார். பிரதமர் டி.எம். ஜயரத்ன சமல் ராஜபக்ஸவின் பெயரை முன்மொழிந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அதனை வழிமொழிந்தார். இதனடியடுத்து பிரதி...
ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்
எரிமலை வெடித்ததால், ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமானப் போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது. இந்தியாவில், ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகியவை, இன்று முதல் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன.ஐஸ்லாந்து நாட்டில் ஐஜாப்ஜலஜோக்குல்...
வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபா ஒதுக்கீடு
இடம்பெயர்ந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபாவை ஒதுக்கியிருப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட 50மீனவர்களுக்கு இந்நிதி வழங்கப்படவூள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (more…)
நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு கட்டானையில் திறப்பு
நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு கட்டானை பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவையை மேலும் செயற் திறன் மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்கில் பாதுகாப்புச்செயலாளர் கோதாபயா ராஜபக்ஷவின் ஆலோசனைக்கேஏற்ப...
இலங்கையின் பிரதமராக ஜெயரத்னே பதவியேற்றார்
இலங்கையின் புதிய பிரதமராக ஜெயரத்னே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில், பார்லிமென்ட் தேர்தல் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில், அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு மொத்தமுள்ள 225 இடங்களில், 144...
இமாச்சலப் பிரதேசத்தில் 2 சீடர்களுடன் நித்யானந்தா கைது!
இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது சீடர்களான நித்ய பக்தானந்தா மற்றும் கோபால் சீலம் ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில்...
புதிய பலாலி கட்டளைத் தளபதி நியமனம்..
யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக குரூப் கப்டன் அத்துல கலுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். குரூப் கப்டன் நிஷேன் அபேசிங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் மேற்படி பதவியை...
இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம்..
முதன் முறையாக யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்தியாவில் 15லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். சேவாலங்கா நிறுவனத்துடன்...
யாழ். இளவாலைச் சிறுவன் கதிர்காமம் மாணிக்க கங்கையில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு
யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் கதிர்காம மாணிக்க கங்கையில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எட்டு வயதுடைய இராமச்சந்திரன் லக்ஸன் என்பவரே கதிர்காம மாணிக்க கங்கையில் நீராடுகையில், இவ்வாறு மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் பெற்றோருடன்...
செல்போனில் லண்டன், கனடாவுக்கு பேசினாரா நளினி?
சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களைத் தடை செய்து சிறை அதிகாரிகள் தொல்லை செய்வதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி புகார் கூறியுள்ளார். நேற்று வேலூர் பெண்கள் சிறை...
35பேர் கொண்ட புதிய அமைச்சரவை டி.எம்.ஜயரட்ண புதிய பிரதமர்..
இலங்கையில் புதிய நாடாளுமன்றம் நாளை கூடிய பின்னர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை 35பேர்கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் எனத் தெரிய வருகிறது. புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி ஆளும்தரப்பின் சிரேஷ்ட உறுப்பினரான டி.எம்.ஜயரட்ணவுக்கு வழங்கப்படும்...
மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் பிள்ளைபிடி..
யாழ்ப்பாணத்தில் பிள்ளைபிடிக்காரர்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக மானிப்பாய் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாயிலுள்ள நலன்புரி முகாமில் வசிக்கும் 13வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று கறுப்புவானில்...
சுன்னாகம் சென்றிருந்த இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்..
வன்னி இடைத்தங்கல் முகாமிலிருந்து உறவினர்களை பார்வையிடுவதற்காக சுன்னாகம் சென்றிருந்த இளம்யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உள்ளுர் நபர்கள் இருவரே தொடர்பு பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஊர் இளைஞர்களால்...
வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு 10கோடி ரூபா ஒதுக்கீடு
இடம்பெயர்ந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட 50மீனவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முல்லைத்தீவு...
யாழிலிருந்து சென்ற ஜேர்மன் பாதிரியார் விபத்தில் படுகாயம்..
நேற்று பிற்பகல் புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன் நாட்டுப் பாதிரியார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இந்த வாகனம் புத்தளம் அநுராதபுரம் சாலையில் விபத்துக்குள்ளானது இதில் ஜேர்மன் பாதிரியார் தவிர மேலும் மூவர்...
அவசரகால சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் -சர்வதேச மன்னிப்புசபை
இலங்கையில் அவசரகால சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை முடிவுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெ தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 7வது...
போலியான பொலிஸ் வாகனம் களுத்துறையில் பிடிபட்டது
களுத்துறையில் போலியான பொலிஸ் வாகனம் ஒன்றை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். களுத்துறைக்கு அருகாமையில் இந்த வாகனம் பயணித்தவேளையில் வேகத்தடைகளை தாண்டி மிகவும் வேகமாகவும் சீரற்ற முறையிலும் இந்த வாகம் செலுத்தப்படுவதை பார்த்த பொலிஸார் வாகனத்தை...
ஜனாதிபதி 2வது பதவிப் பிரமாணம்வரை 38பேருடன் தற்காலிக அமைச்சரவை
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாணம்வரை 38 உறுப்பினர்களுடன் தற்காலிக அமைச்சரவையே நாளை பதவியேற்கும் என்று அரச வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன அதன்படி எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது பதிவிக் காலத்துக்கென சத்தியப்பிரமாணம் செய்த...
பொன்சேகாவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற ஜேவிபியின் கருத்து நகைப்புக்குரியது -ஐ.தே.கட்சி தெரிவிப்பு!
ஜெனரல் பொன்சேகாவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற ஜே.விபியின் கோரிக்கை நகைப்புக்குரியதென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. கட்சி படுதோல்வியை தழுவியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்...
கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி
கதிர்காமத்துக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த சிறுவன் இராமசந்திரன் லஷான் வயது8என்பனே இவ்வாறு ஆற்றில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது கதிர்காம தரிசனத்திற்கு சென்ற அச்சிறுவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது...
பொன்சேகாவின் பாராளுமன்ற பிரவேசத்திற்கு தடையில்லை -எதிர்கட்சி தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர் என்ற வகையில் ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு எவ்விதமான தடையும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...
மின்னல் தாக்கம் குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் -வளிமண்டலவியம் திணைக்களம்
மின்னல் தாக்கம் குறித்துமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது நாட்டின் பலபாகங்களிலும் இடிமின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. பதுளை இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட மி;ன்னல்...
படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்திய நால்வர் கைது
படகுகளை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய நான்குபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீன்பிடி படகுகளை பயன்படுத்தி குறித்த சந்தேக நபர்கள் ஆட்களை கடத்தியுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் வாழைச்சேனை ஊடாக சில...