76பேருடன் கனடா சென்றடைந்துள்ள ஓசியன்லேடி என்கிற கப்பல் புலிகளுடையது..

இலங்கையிலிருந்து 76பேருடன் கனடா சென்றடைந்த ஓசியன் லேடி என்கிற கப்பல் புலிகளுடையதென தெரிவிக்கப்படுகின்றது. இக்கப்பல் புலிகளால் வட கொரியாவிலிருந்து ஆயுதங்களை கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் வன்னியில்...

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம்

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுவரும் நிலையில் தமிழ்நாடு இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் உள்ளிட்ட தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்ப ஆர்வம் காட்டுவதாக தமிழக செய்திகள்...

உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதில்லையென தமிழ் ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவிப்பு

தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத்தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர் தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான...

ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக தெரிவித்து கேர்ணல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட 5சந்தேகநபர் மீது தீவிர விசாரணை

கேர்ணல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட 5பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்கள் இருவர்...

13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் -வாசுதேவ நாணயக்கார

13ஆவது திருத்தச் சட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.அதிகார...

யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயக்க நடவடிக்கை

யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் அவை இயங்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளதென கைத்தொழில் அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு...

முக்கிய பௌத்த பிக்குகள் சிலர் சரத்பொன்சேகாவுடன் விஷேட பேச்சு

முக்கிய பௌத்த பிக்குகள் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரர் மற்றும் எல்லாவெல மேதாந்த தேரர் ஆகியோர் சரத்பொன்சேகாவுடன்...

குருநாகல் ஆங்கில ஆசிரியர் கொலை தொடர்பாக ஆசிரியை கைது

குருநாகல் பகுதியில் ஆங்கில ஆசிரியர் ஒருவரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை பாதாள குழுவொன்றின் தலைவரிடம் இக்கொலையைப் புரிவதற்கு ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென...

மலேசியாவில் 6 இலங்கையர்கள், ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி 7நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம்

மலேசிய அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 6 இலங்கையர்கள், அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்திக்க தமக்கு அனுமதி வழங்குமாறு கோரி 7நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணொருவர் உட்பட உண்ணாவிரதம் இருக்கும் ஆறுபேரும் மலேசியாவில் ஜோஹோர்...

கனடாவில் கைதான 76 இலங்கையர்களில் ஒருவர் விடுதலை

கனடாவில் கப்பலில் சென்ற நிலையில் கைதான 76 இலங்கையர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டு அந்த சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார். எனினும் எஞ்சிய 75பேரும் வன்கூவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இவர்கள்...

எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இரு குழுக்களிடையில் மோதல், ஒருவர் உயிரிழப்பு

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இரு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதலின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை பலசல்ல வீதியிலுள்ள...

மிளகாய் தொட்டியி்ல் நீத்து!!

"கைவசம் மும்பை ஹீரோயின் இருக்கு... சீன் படு ஹாட்டா வரணும்... பாத்தாலே பத்திக்கணும்... என்ன செய்யலாம்?" "பேசமா மிளகாய் தொட்டியில இறக்கிவிட்டா.. படு ஹாட்டா இருக்காது?" "ஆ... சூப்பர் ஐடியா... அதையே சீனாக்கு" -படிக்க...

ஜனாதிபதியிடம் விருது பெற்றார் பிரகாஷ் ராஜ்

2007-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை பிரகாஷ் ராஜுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் வழங்கினார். காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 55-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த...

முன்னாள் இராணுவத்தளபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க சட்டத்தில் இடமுள்ளதாவென ஆராயும்படி சட்டமா அதிபருக்கு உத்தரவு

ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவலொன்று பரவிவருவதால் சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? என ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிற்கு உத்தரவு...

பிரேசில் சிறையில் கலவரம்-7 கைதிகள் எரித்து கொலை

பிரேசில் நாட்டின் வட கிழக்கு பகுதியில் ஜொவா பெசோவா என்ற இடத்தில் உள்ள சிறையில் 860 தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் கைதிகளிடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதையடுத்து சிறைக்குள் இரு...

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் கணபதி கனகராஜ்

ஜனாதிபதித் தேர்தலில் இனவாதிகளுக்கும் இனவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களும் எதிராக சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றி சிந்திக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின்...

இலங்கையர்கள் உட்பட்ட 135சட்டவிரோத குடியேறிகள் துருக்கிய படைத்தரப்பினரால் கைது!

இலங்கையர்கள் உட்பட்ட 135சட்டவிரோத குடியேறிகளை துருக்கிய படைத்தரப்பினர் கைதுசெய்துள்ளனர். துருக்கியின் ஐடின் மாகாணத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பாவுக்குச் சட்டவிரோதமாக நுழைய தயாரான நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் துருக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,...

கப்பம், கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபட்ட புலிச் சந்தேகநபர்களான பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் வவுனியாவில் கைது

கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட பெண்ணொருவரும் மேலும் மூவரும் வவுனியாவில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சந்தேகநபர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து தப்பிச்சென்றவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

ஐ.நா. விஷேடபிரதிநிதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களுமே இலங்கைக்கு எதிரான அறிக்கைகளை வழங்கியுள்ளன -சிங்கள ஊடகம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் விஷேட பிரதிநிதிகளும் சில சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய தகவல்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த...

கேப் கொலராடா (வணங்கா மண்) கப்பலின் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை இன்று அரசாங்கத்திடம்..

கெப்டன் அலி கப்பலில் இருந்து இலங்கைக்கு கேப் கொலராடா கப்பலின்மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இன்று அரசாங்த்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 3மாத காலமாக கொழும்பு துறைமுகத்தில்...

கடவுளுக்கு முன் செருப்புக் காலுடன் உட்கார்ந்த குஷ்பு மீதான வழக்கு ரத்து

இந்துக் கடவளை அவமதிக்கும் வகையில் செருப்புக் காலுடன் உட்கார்ந்தது தொடர்பாக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. "வல்லமை தாராயோ" பட தொடக்க விழா கடந்த...

புலி முகவர்களைத் தேடி தாய்லாந்தில் வேட்டை, அப்பாவி தமிழ் அகதிகள் பாதிப்பு.. புலி முகவர்களான பிரபாவும், சங்கருமே பிரதான இலக்கு!

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜண்டாக செயற்பட்டுவரும் கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான யோகி என்கிற யோகேஸ்வரன் தங்கியிருந்த தாய்லாந்தின் பாங்கோக் நகர்ப் பகுதியில் நேற்று முன்தினம் பாங்கோக் பொலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது...

ராஜ் ராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கியமை கே.பி மூலம் அம்பலம்

புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல கோடீஸ்வரரான ராஜ் ராஜரட்ணம் மற்றும் அவரது குடும்ப நிறுவனத்திற்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு...

சிரிப்பதற்காக அழுத சபாநாயகர் லொக்குபண்டார..

சபாநாயகரான எனக்கு இந்த சபையில் சிரிப்பதற்கு கூட உரிமை இல்லையா? என எதிர்கட்சி உறுப்பினர்களைப்பார்த்து வி.ஜே.மு.லொக்குபண்டார நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசிய...

பா.நடேசன், புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்தவேளை கொலை செய்யப்பட்டது உண்மையே -பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி

சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கைமீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல்களையும் மற்றும் புலனாய்வு...

இரணைப்பாலையில் விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் 2மீட்பு

இரணைப்பாலையில் விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் 2மீட்பு புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான 2சேம்மிசைல்களை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு...

மலேசியாவின் தடுப்புமுகாமிலுள்ள ஆறு இலங்கையர்கள் உண்ணாவிரதம்

மலேசியாவின் பிரீக்கன் நனா தடுப்புமுகாமிலுள்ள ஆறு இலங்கையர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார். கடந்த மாதம் முறையான ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள...

முல்லைத்தீவில் முதன்முறையாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகிறது -அரசஅதிபர் எமில்டா சுகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பிக்கப்படுவதாக அம்மாவட்ட அரசஅதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். சுமார் 300குடும்பங்களைச் சேர்ந்த 1000பேர் முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். அனிஞ்சியன்குளம்...

வெள்ளவத்தையில் பெண்ணொருவரின் கைப்பையைக் கொள்ளையடித்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கொழும்பு, வெள்ளவத்தையில் பெண்ணொருவரின் கைப்பையைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் எதிர்வரும் நவம்பர்மாதம் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .இவர் கல்கிசை நீதிமன்ற மேலதிக நீதவான் ரிஷ்டன் டெலிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே...

புலிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் ராஜ் ரத்னம் மீது வழக்கு

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குண்டு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிலர் தொழிலதிபர் ராஜ் ராஜரத்னம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவில் செட்டிலான இலங்கைவாசி, உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவர் ராஜ் ராஜரத்னம் சமீபத்தில்...

கனேடிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைக்குமாறு உத்தரவு

கனேடிய  கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைக்குமாறு அந்நாட்டு குடிவரவு ஆராய்வுசபை உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த அகதிகளிடம் கனேடியப் பிரதிநிதிகள் விசாரணைசெய்து வருகின்றனர். இந்நிலையில் 76பேரையும் விசாரிப்பதற்கு...

மாத்தறை வைத்தியசாலையிலிருந்து குதித்து பெண் தற்கொலை

மாத்தறைப் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் வைத்து இன்று அதிகாலை பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்....

வாகரைப் பொலீசாரினால் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் ஐவர் விடுதலை

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதான ஐந்து இந்திய பிரஜைகளையும் நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டுக்குள்...

மன்னார் மாந்தையில் மீள்குடியேற்ற நிகழ்வு, புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பங்கேற்பு

மன்னார் மாவட்டம் மாந்தைப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன. முதற்கட்டமாக அங்கு 1300பேர் இன்றையதினம் குடியேற்றப்பட்டனர். ஓரிரு தினங்களுக்குள் 12ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41,685 மக்கள் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும்...

அராலி வடக்கு சுரேஸ்குமார் மற்றும் கரவேப்பங்குளம் நிசாந்தன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மயிலம்புலம் அராலி வடக்கை சேர்ந்த 32வயதான துரைசாமி சுரேஸ்குமார் என்பவர் கடந்த 10ம் திகதி, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளார்  இதனை தவிர, வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் கரவேப்பங்குளத்தை சேர்ந்த...

புலிகளின் 144 சிறார் போராளிகள் பள்ளியில் அனுமதி

புலிகள் அமைப்பில் இருந்த 144 முன்னாள் சிறார் போராளிகளை படிப்புக்காக பள்ளியில் சேர்த்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வந்த உள்நாட்டுப் போரின் போது புலிகள் அமைப்பில் இவர்கள் சேர்க்கப்பட்டு போர் முனையில்...

ரிஹர்சல் சத்தத்தால் எரிச்சல் – மடோனா மீது பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு

பாப் பாடகி மடோனா தனது வீட்டில், ரிஹர்சல் செய்யும்போது பெரும் சத்தம் எழுவதாகவும், இது தனக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் கூறி அவர் மீது அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நியூயார்க்கின்...

படகில் வந்த 32 தமிழ் அகதிகளை பிடித்த ஆஸ்திரேலியா

படகு மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்த 32 இலங்கைத் தமிழர்களை தடுத்துப் பிடித்த ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர். படகில் உள்ள 32 பேருமே ஆண்கள் ஆவர். இந்த ஆண்டில்...