பாரிஸில் இலங்கைத் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 210 பேர் கைது
இலங்கைத் தமிழர்களின் அவலநிலை தொடர்பாக பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 210 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த...
கொள்ளையிட வந்தவர்களுக்கு வேட்டு வைத்த வர்த்தகர்..
வீட்டில் நுழைந்து கொள்ளையிடும் நோக்கில் பலவந்தமாக உட்பிரவேசித்த கொள்ளையர் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கொள்ளையர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என...
பஸ் வான் மோதி அறுவர் காயம்
இ.போ.ச பஸ் ஒன்றம் வானும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6பேர் கடுங்காயங்களுக்கு உள்ளாகி கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.00மணியளவில் அட்டன் மாணிக்கம்பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக அட்டன் டிம்புள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது. அட்டனிலிருந்து...
சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றியவர் மரணம்
ஹிங்குராங்கொட பக்கமூன புதுவருட சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் வேகமாக சென்று கொண்டிருந்த சைக்கிள் பாதையை விட்டுவிலகி குழியொன்றுக்குள் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் நிமல்...
கெக்கிராவையில் துப்பாக்கிச்சூடு.. இருவர் வைத்தியசாலையில் அனுமதி
அநுராதபுரம் கெக்கிராவையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைநத் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது மகளை பஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மகளின் கழுத்திலுள்ள தங்கச்சங்கிலியை...
பாதுகாப்பான இடங்களை நோக்கி பொதுமக்கள் வருகை தந்தமை வரவேற்கத்தக்கது பான் கீ மூன்
பாதுகாப்பான இடங்களை நோக்கி அதிகளவிலான பொது மக்கள் வருகை தந்தது வரவேற்கத்தக்க விடயம் என ஜ.நா பொது செயளாளர் பான் கீ மூனின் ஊடக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மோதல் நடைபெறும்...
வன்னியில் இறுதிக்கட்டமோதலில் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் -யுனிசெப் எச்சரிக்கை
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்று வரும் இறுதிக்கட்ட போராட்டம் காரணமாக சிறுவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என யுனிசெப் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது இராணுவத்தினரின் தொடர்ச்சியான தாக்குதலாலும் புலிகள் பொதுமக்களை தடுத்து...
உரிமைகள் காப்பகம் அவசர அழைப்பு
வன்னியில் இரத்தஆறு ஒன்று ஒடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணிநேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் அவசர கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை...
புதுமாத்தளன் வைத்தியசாலைப் பகுதியை இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பு
இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பிரதேசத்தில் இருக்கும் புதுமாத்தளன் மருத்துவமனைப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை இராணுவம் போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் கிழக்கு கடற்கரை...
வவுனியா பெண்நோயியல் நிபுணர் சுட்டுக்கொலை
வவுனியா பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் நிபுணராகிய (வீ.ஓ.ஜி)) டாக்டர் மீரா மொஹீதீன் நேற்றுமாலை 7.00மணியளவில் தோணிக்கல் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு காயத்துக்கு உள்ளான அவர்...
விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது -ரணில் விக்கிரமசிங்க
விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டபோது தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் புதிய அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதனுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தான் விரும்புவதாக...
பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40 வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில்..
பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் விசா இன்று நாட்டில் தங்கியிருந்ததால் கைதுசெய்யப்பட்டதாக திணைக்களத்தின் உதவி...
விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால்.. தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள முடியாது: நோர்வே
விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால் நோர்வே மக்கள் மிகவும் களைப்படைந் திருப்பதாகவும், இவ்வாறான போராட்டங்களால் ஏற்படும் தொந்தரவுகளைச் சகித்துக்கொள்ளமுடியாதிருப்பதாகவும் நோர்வேயின் எழுத்தாளர் ஜான் ஹோர்ன் தெரிவித்துள்ளார். “நோர்வேயிலுள்ள தமிழர்கள் சிறந்த முறையிலேயே...
விசேட பிரதிநிதியை ஐ.நாவுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லை:கெஹலிய ரம்புக்வெல
இலங்கை நிலைவரம் குறித்து ஆராய விசேட பிரதிநிதியை ஐக்கிய நாடுகளுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லையென பாதுகாப்புப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் தலையிடுவதற்கு பிரித்தானியா உட்பட சர்வதேச சமூகத்துக்கு உரிமையில்லையெனவும்...
படகுகளில் வந்த பொதுமக்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்
வடகிழக்கின் கரையோரப் பகுதியில் 92 படகுகளில் சென்ற 1,500 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். 80 படகுகள் பருத்தித்துறை துறைமுகத்திற்குச் செல்வதற்கும், 12 படகுகள் புல்மோட்டைக்கு செல்வதற்கும் கடற்படையினர் வழித்துணை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு...
இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினர் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் -கனடா
இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினர் துரிதமான தீர்மானமொன்றிற்காக செயற்படுவதுடன் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென்று கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் மனித அவலங்கள் தொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கெய்னோன் அறிக்கையொன்றினை இன்று...
தாக்குதல் மூலமே புலிகளை வெற்றிகாண முடியுமென்பதை நன்கு உணர்ந்துள்ளேன் -ஜனாதிபதி
புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவரை உயிருடனோ அல்லது உயிரற்ற நிலையிலோ பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைவதற்காக அவருக்கு வழங்கிய காலக்கெடுவின்...
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 23பேர் கைது
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 23பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றுமாலை கைது செய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். ஓமந்தைச் சோதனைச் சாவடியில்...
தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நபரும் நிபத்தனை விதிக்க முடியாது -பாதுகாப்புப் பேச்சாளர்
தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நபரும் நிபத்தனை விதிக்க முடியாதென்று பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இத்தகைய நிபந்தனைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் ஜனாதிபதியால் தெளிவாகத்...
பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்படும்வரை புலிகளுடன் எந்தவொரு உடன்படிக்கைக்கும் போகப் போவதில்லை -இராணுவத் தளபதி
படையினர் தற்போது பாதுகாப்பு வலயத்தினுள் உட்பிரவேசித்துள்ளனர். புதுமாந்தளன் வாவிப்பகுதியின் ஊடாக நேற்றிரவு படையினர் இந்தப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளனர் என்று தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேசமயம் இப்பகுதியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 03 கிலோமீற்றர் நீளமான...
புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 35ஆயிரம் பேர் விடுவிப்பு -ஜனாதிபதி
வன்னியில் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இன்றுகாலை புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 35ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் ஆளில்லா விமானம்மூலம் அவதானிக்கப்பட்டதாகவும்,...
உலகில் மிகப்பெரிய மக்கள் மீட்புப் பணியின் ஒரு தொகுதி இன்றுகாலை வெற்றி -அரசாங்கம்
உலகிலேயே மிகப்பெரியளவில் பணயக் கைதிகளாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அப்பாவி மக்களை மீட்கும் நடவடிக்கையின் ஒருபகுதி இன்றுகாலை வெற்றி காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தகவல்படி, புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த...
கொழும்பில் நோர்வே தூதரத்திற்கு முன்னால் ஆர்பாட்டம்
தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் நோர்வே தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்; ஒன்றினை மேற்கொண்டுள்ளன நோர்வே அரசாங்கம் தழிழீழ விடுதலைப்;புலிகள் இயக்கத்திற்கு சார்பான வகையிலான கொள்கைகளை கடைப்பிடிப்பதாக...
நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி
நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில்இ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்...
இலங்கைப் பிரச்சினையில் ஜெ.வை முந்தும் முயற்சியே கருணாநிதியின் பேச்சு: சோ, சாமி
இலங்கைப் பிரச்சினையில் எங்கே ஜெயலலிதா பெயரைத் தட்டிச் சென்று விடப் போகிறாரோ என்ற பயத்தில்தான் பிரபாகரனை புகழ்ந்து பேசியுள்ளார் கருணாநிதி என்று பத்திரிக்கையாளர் சோ மற்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளனர்....
புலிகள் பகுதியிலிருந்து 35,000 தமிழர்கள் மீட்பு: ராணுவம்
விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதியிலிருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் தமிழர்கள் மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த ஒரு பகுதியை இன்று காலை ராணுவம் பிடித்ததாகவும்இ அந்தப் பகுதியில்...
உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்கள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்திப்பு
உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்தித்து அவர்களின் சேம நலன் குறித்து ஆராய்ந்துள்ளார். மாவிலாறு முதல் இடம்பெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கையில் உயிர்நீத்த படைவீரர்களின் உறவினர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...
இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட பிரிட்டன் வலியுறுத்தல்
இலங்கையின் வடக்கில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசு, அங்கே சிவிலியன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உடனடி யுத்தநிறுத்தமொன்று ஏற்படவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் வர...
நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் -அஸ்கிரிய தேரர்!
நோர்வேக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம சிறீ புத்தரகித்த தேரர் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஒஸ்லோவில்...
கல்முனை பொலிஸ் பயிற்சிக்கல்லுரி பணிப்பாளரின் கொலையில் கருணா தொடர்பு??
கல்முனை பொலிஸ் பயிற்சிகக் கல்லுரி பணிப்பாளர் எம் எச் ஜமால்தீன் படுகொலைச் சம்பவத்துடன் கருணா தரப்பிற்கு தொடர்பு இருப்பதாக ஆங்கில உடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது கருணா தரப்பின் கூலிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது சிரேஸ்ட...
பல்வேறு ஊடகங்களில் சுவிஸ் புலிகளுடன் இணைந்து ரவுடிக்கும்பல் நடாத்திய உண்ணாவிரதம் குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்குப் பிரதிபலிப்பாக நடைபெற்ற சம்பவம்..!
சுவிஸ் புலிகளின் மாணவர் அமைப்பான ரி.வை.ஓவுடன் இணைந்து, பாம்புகுறு}ப் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் இந்த இளைஞர்குழு கடந்த சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்கு சென்ற சுவிஸ் புலிகளின் தலைமைப் பீடமானது நீங்கள்...
பொலீசாரின் விசாரணைகளில் அரசு தலையிடுவதனாலே குற்றவாளி கைதாகவில்லை -ஜே.வி.பி!
பொலீசாரின் விசாரணைகளில் அரசாங்கம் தலையிடுவதன் காரணமாகவே கம்பஹா மாவட்டம் வியாங்கொடையில் தமது உறுப்பினர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லையென்று ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி எம்.பி அனுரகுமார திசநாயக்க இந்தக்...
முல்லைத்தீவில் இருந்து அழைத்து வரப்பட்ட நோயாளர்களுள் இருவர் மரணம்
முல்லைத்தீவில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் நேற்று அழைத்து வரப்பட்டவர்களில் இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நோயாளர்கள் காயமடைந்தவர்கள் மற்றம் அவர்களது உறவினர்களும் உதவியாளர்களும் என 484பேர் நேற்று கப்பல் மூலம் புல்மோட்டைக்கு...
அக்கரைப்பற்றில் கணவன் மற்றும் மனைவி வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கணவனும் மனைவியும் இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது கால்நடை வியாபாரியான சின்னத்துரை கீர்த்தி (வயது50) மற்றம் அவரது மனைவி மகேஸ்வரி வயது54 ஆகியோரே கடத்தப்பட்டவர்கள் எனத்...
கிழக்கு மாகாண சபையில் நாளை நடைபெறவிருந்த விவாதம் ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து மே மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைப்பு
உள்ளுராட்சி அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அங்கீகரிப்பது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் நாளை நடைபெறவிருந்த விவாதம் மே மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் இச்சட்டமூலத்தில் திருத்தங்களைச் செய்து கிழக்கு...
யாருடைய நெருக்குதலாலும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை: இலங்கை அதிபர் ராஜபட்ச
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாருடைய நெருக்குதல் காரணமாகவும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார். போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல முன்னணி நாடுகள் இலங்கையை...
போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: தமிழ் தேசிய கூட்டணி
இலங்கையில் நடைபெறும் போரை முற்றிலுமாக நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டுமென்று விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது. இக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தம் இது குறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை...
பிரபாகரனை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் – ஜெ.ஜெயலலிதா
ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நாகர்கோவிலில் நேற்று அதிமுக...