தமிழ்ப் பகுதிகளுக்கு தங்களால் செல்ல முடியாதுள்ளது: இரா.சம்பந்தன்

தமிழ்ப் பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய தங்களால்க்கூட செல்லமுடியாத நிலையிருப்பதாக இந்தியப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் பகுதிகளுக்கோ அல்லது முகாம்களுக்கோ தாம் செல்வதற்கு...

பிரபாகரன் கிழக்கு பகுதிக்கு தப்பினார்???

வன்னி போர் முனையிலிருந்து பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரும் தப்பிச் சென்றுவிட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் தலைவர்...

லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்: 5 தமிழர்கள் கைது

லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாக 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் போர் நிறுத்ததை வலியுறுத்தி பிரிட்டன் வாழ் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ்...

உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதைப் போல அல்லாமல், கனரக ஆயுதங்கள் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம்...

போர்நிறுத்தம் இல்லை; அனைத்து மக்களும் விடுவிக்கப்படும் வரை மீட்பு நடவடிக்கை தொடரும்: ஜனாதிபதி

விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் மக்களில் இறுதியாகவுள்ள ஒருவர் மீட்கப்படும் வரை மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்துக்குள் இன்னமும் விடுதலைப் புலிகள் இருப்பதாக புலனாய்வுத்...

ஜோன் ஹோல்ம்ஸ் வவுனியாவுக்கு சென்றுள்ளார்

இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் செட்டிகுளம் நலன்புரி முகாம்களுக்கு சென்றுள்ளார். நேற்று திங்கட்கிழமை நலன்புரி முகாம்களுக்கு சென்றுள்ள ஜோன் ஹோல்ம்ஸ், அங்கிருக்கும் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன்,...

அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்கவேண்டும்: பிரித்தானியா

விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக்குப் பதிலாக இலங்கை அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்க வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் மூலம் மோதல்ப் பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறமுடியுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட்...

சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அனுமதி மறுப்பு

சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட்டின் இலங்கை விஜயத்துக்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய வெளிவிவகராச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர் மற்றும் சுவீடன்...

கல்முனையில் நகை வியாபாரி குத்திக்கொலை

கல்முனையை சேர்ந்த நகைவியாபாரியான அஹமது லெப்பை றபீக்தீன் வயது38 என்பவரே இனந்தெரியாத ஆயுததாரிகளினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகளின் தந்தையான கல்முனைக்குடியை சேர்ந்த அஹமது லெப்பை றபீக்தீன் என்பவர் நேற்ற முன்தினம் பி.ப சம்பாந்துறை...

கல்கிசை பஹத்தோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

மேல் மாகாணசபைத் தேர்தல் தினத்தன்று கொழும்பு புறநகர்ப் பகுதியான கல்கிசை பஹத்தோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேச வீடொன்றில் இருந்தபோதே சந்தேகநபர்...

மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது காவலாளி சூடு, ஒருவர் பலி

புத்தளம் மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது தோட்டக் காவலாளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 8.30அளவில் இடம்பெற்றதாகவும், சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பஸ்தரான 48வயதுடைய பீ.எம்.சுமதிபால எனவும்...

புலிபாய்ந்தகல் கூழாங்காடு பகுதியில் வெட்டபட்டிருந்த ஆழமான கிணறு ஒன்றுக்குள் நேற்றுக்காலை தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பட்ட புலிபாய்ந்தகல் கூழாங்காடு பகுதியில் வெட்டபட்டிருந்த ஆழமான கிணறு ஒன்றுக்குள் நேற்றுக்காலை தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏழு வயது, ஒன்பது வயது பத்து வயதுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு...

மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்: போர்நிறுத்தமில்லை என்கிறது இராணுவம்

மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும்இ இது போர்நிறுத்தம் இல்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தும்...

உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் தமிழக முதல்வர்

இலங்கையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படவேண்டுமெனக் கூறி தமிழக முதல்வர் மு.கருணாநிதி மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலை அண்ணா நினைவிடத்துக்குச் சென்ற மு.கருணாநிதி திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த...

பிரித்தானிய, பிரான்ஸ், சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை விரைவு

பிரித்தானிய, பிரான்ஸ் மற்றும் சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் இவர்கள் இலங்கை வரப்போவதாக அறிவித்துள்ளனர். “பிரித்தானிய வெளிவிவகாரச்...

பானமை உகந்தைப் பிரதேசத்தில் ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொலை

அம்பாறை பொத்துவில் பானமை, உகந்தைக் கோயிலுக்கு அருகிலுள்ள கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த ஐந்து மீனவர்கள் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளதாக பொத்துவில் பொலீசார் தெரிவித்துள்ளனர். பானமை வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு...

அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையை சென்றடைந்த 56பேர் கைது

அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையோரப் பகுதியை நோக்கி 56பேருடன் சென்றடைந்த படகொன்றினை அந்நாட்டு அதிகாரிகள் வழிமறித்துள்ளனர். படகில் பயணித்த 54பேரையும், மாலுமிகள் இருவரையும் அவுஸ்திரேலியக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் பொப்...

ஜனாதிபதியுடனான இந்திய உயர்மட்டத்தினரின் சந்திப்பில் போர்நிறுத்தம் பற்றி பேசப்படவில்லை-ஜனாதிபதி ஆலோசகர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவுச்செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது போர்நிறுத்தம் குறித்து பேசப்படவே இல்லையென்று ஜனாதிபதியின் செயலாளரும், இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தவருமான லலித் வீரதுங்க...

புலி உறுப்பினர்கள் 52பேர் சரண்! : சரணடைந்தவர்களின் 23பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்!

பெருமளவில் படையினரிடம் சரணடைந்துள்ளனர். நேற்றையதினம் புலிகளின் 52 உறுப்பினர்கள் வளைஞர்மடம் பகுதியில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த மேற்படி புலி உறுப்பினர்களில் 23பேர் புலிகளிடம் பயிற்சிபெற்ற 13 வயதுக்கு 18 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்கள் என்றும்...

மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு கோருவது நியாயமற்றது

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு வெளிநாடொன்று கோருவது நியாயமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் உள்ளகப்...

புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்கா தலைமையிலான டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இணைத்தலைமைகள் சார்பில் அமெரிக்க காங்கிரஸ் செய்மதித்...

விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பு: அரசாங்கம் நிராகரிப்பு

சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஒருதலைப்பட்ச போர்நிறுத்தமொன்றை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். எனினுமஇ விடுதலைப் புலிகளின் இந்த ஒருதலைப்பட்ச அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும் இலங்கை அரசாங்கம்இ விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது....

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

வலைஞர்மடமும் கைப்பற்றப்பட்டது: பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் இறுதி மறைவிடமான வலைஞர்மடத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர்மடம் பகுதியை இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் நேற்று சனிக்கிழமை மாலை கைப்பற்றியதாகவும்இ இந்தப் பகுதியை இராணுவத்தினர் இன்று...

எதிர்கட்சி தலைவருடன் பகிரங்க விவாதம் நடத்த ஜனாதிபதி இணக்கம்

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பகிரங்க விவாதம் நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். முக்கிய பிரச்சினைகள் குறித்த எதிர்கட்சியின் கேள்விகளுக்கு பதிலளிக்க தாம் தயார் என அவர் சுட்டிக்...

மேல்மாகாணசபைத் தேர்தல், கம்பஹா, களுத்துறையில் ஆளும் கூட்டணி வெற்றி, கொழும்பில் எதிர்க்கட்சி வெற்றி!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல்மாகாணசபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் அதிகாரத்தினை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தன்வசமாக்கியுள்ளது. இந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6லட்சத்து 24ஆயிரத்து 530வாக்குகளைப்...

கப்பம் பெறவேண்டிய தேவை எமக்கில்லை; தமக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்யவும் -கருணாஅம்மான்

தனக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பலம் பெற முயற்சிக்கும் நபர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) பொலீசாரிடம்...

ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை வந்தார்; வவுனியா சென்று நிலைமைகளைப் பார்வையிடுவார்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் திட்டமிட்டபடி சனிக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வவுனியா சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவார் என்று...

இடம்பெயர்தோரால் நிரம்பி வழியும் வவுனியா; உணவுக்கும், குடிநீருக்கும் கையேந்தும் இலட்சக்கணக்கான மக்கள்

வன்னியில் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து கடந்த 20ம் திகதி முதல் வந்துசேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு வருவதால், வவுனியா நகரம் இடம்பெயர்ந்த வன்னி மக்களால் நிரம்பி வழிகிறது. பஸ்களிலும்,...

இடம் பெயரும் மக்களுக்கு சமைத்து உதவ 115 முஸ்லிம்கள் வன்னி விரைவு

வன்னியில் இடம் பெயர்ந் துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தி லிருந்து 115 முஸ்லிம்கள் நேற்று வன்னிக்கு சென்றனர். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலியின் வேண்டுகோளுக்கிணங்க...

இடம்பெயர்ந்த மக்களுக்கு புளொட் தொடர்ந்து நிவாரண உதவி

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியாப் பகுதியை வந்தடைந்த பொதுமக்களுக்கு புளொட் அமைப்பின் நிவாரணப் பிரிவினர் நேற்றையதினமும் 40,000ற்கும் அதிகமான உணவுப் பொதிகளை விநியோகித்துள்ளனர். நேற்றுமுன்தினமும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொதிகள் இம்மக்களுக்கு வழங்கப்பட்டமை தெரிந்ததே....

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த கிறிஸ்தவ போதகர்கள், கன்னியாஸ்திரிகள் 21பேர் படையினரிடம் தஞ்சம்

வன்னியின் முல்லைத்தீவு புதுமாந்தளன் பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் கன்னியாஸ்தரிகள் என 21பேர் அங்கிருந்து தப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முற்பகல் 10.30மணியளவில் ஒருவாறு அங்கிருந்து...

வவுணதீவில் துப்பாக்கிப் பிரயோகம், பால் விற்கச் சென்றவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலீசார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு பிரதேசத்திற்கு பால் விற்பனைக்காக சென்றவரின்மீதே ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும், மேற்படி துப்பாக்கிச்...

ஜேர்மனி பெர்லின், இலங்கைத் து}தரகம்மீது புலிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல்

ஜேர்மன் பெர்லினில் அமைந்துள்ள இலங்கைத் து}தரகத்தின்மீது புலிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அங்கு வந்த புலி ஆதரவாளர்கள் இரண்டு பெற்றோல் குண்டுகளை வீசியதாகவும், இதில் ஒன்றே வெடித்துள்ளதாகவும்...

புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டும் -அமெரிக்கா கோரிக்கை

புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டுமென அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்களை...

பிரபாகரன் எந்த வழியில் தப்புவார்?

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் நீர் மூழ்கி கப்பல் மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்று இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு வளைய பகுதியின் மிக குறுகிய...

இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியவர்களை ஆதாரங்கள் இருந்தும் கைது செய்யாத நோர்வே

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது கடந்த 13 ஆம் திகதி புலிகள் இயக்கக் குழுவினரும் ஆதாரவாளர்களும் பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலின் போது தூதரகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்த பொருட்கள்...