விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-2)
முதலில் போன ஹெலிகாப்டர்கள்... 2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால்...
திடீரெனப் பணக்காரர்களான பாதுகாப்பு அதிகாரிகள்: விசாரணைகள் ஆரம்பம்
இரவுடன் இரவாக இலட்சாதிபதிகளாகிய சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விடுதலைப் புலிகளுக்கும், இவர்களுக்கும் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசாரணை நடைபெறுவதாகவும் தெரியவருகிறது. விடுதலைப்...
விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-1)
இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது. குறிப்பாக...
முரளி சுழலில் வீழ்ந்து நியூசி.. -202 ரன்களில் இலங்கை வெற்றி
காலே டெஸ்டில் முரளிதரன் சுழலில் சிக்கிய நியூசிலாந்து அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைடந்தது. இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலேவில் நடந்தது....
‘கப்டன் அலி’ நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்..
வன்னி மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. 660 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள்...
த.தே.கூ.வின் முஸ்லிம் உறுப்பினர்கள் கட்சி தாவத் தயார்: அமைச்சர் முரளிதரன்
யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான...
புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களுடனான சந்திப்புக்கு இலங்கை எதிர்ப்பு
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக வெஷிங்டனிலுள்ள அமெரிக்கத்...
நலன்புரி நிலையங்களிலுள்ளவர்களை உறவினர்களுடன் அனுப்ப இணக்கம்?
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசித்து வரும் வன்னி மக்களை அவர்களுடைய உறவினர்கள் பொறுப்பேற்கக்கூடிய ஏற்பாடு ஒன்று குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. நலன்புரி நிலையங்களின் வசிப்போர் விரைவில் அங்கிருந்து விடுவிக்கப்படவேண்டும், அல்லது மீள் குடியேற்றப்படவேண்டும்...
உயர்தரப்பரீட்சை வினாத்தாளில் இனரீதியான கேள்வி: ஐ.தே.க.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கேள்விகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த முறை சிங்களமொழி வினாத்தாளில் இராணுவ நடவடிக்கைகள்...