துப்பாக்கிச்சூட்டில் மாணவன் பலி

அநுராதபுரம் எலபத்துவ பகுதியில் வேட்டையாடச் சென்ற நபரொருபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் கொல்லப்பட்டார் தனது சகோதரனுடன் காட்டுக்குச் சென்று கஜூ பறித்துக் கொண்டிருந்த 16வயது மாணவனே இவ்வாறு கொல்லப்பட்டார் என...

கண்டியில் அமைச்சர் கருணாஅம்மான் தரப்பினர் கப்பம் கோருவதாக முறைப்பாடு

கண்டியில் உள்ள தமிழ் வர்த்தகர்களிடம் அமைச்சர் கருணாஅம்மான் தரப்பினரால் கப்பம்கோரி தொலைபேசி அழைப்புகள் தொடுக்கப்படுவதாக முறையிடப்பட்டள்ளது இதுதொடர்பாக பிரதி அமைச்சர் பி.இராதாகிருஷ்ணன் பொலிஸ் மாஅதிபருக்கு முறையிட்டுள்ளார். ஒரு லட்சம் முதல் ஐந்துலட்சம் ரூபா வரையிலான...

இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐ.நாவிற்கு உரிமையில்லை -இலங்கை அரசாங்கம்

இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவைக்கு எவ்வித உரிமையும் இல்லை என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை...

சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 22தமிழர்கள் நீர்கொழும்பில் கைது

சட்டவிரோதமான முறையில் நீர்கொழும்பு கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்லமுயன்ற 22பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல ஒருவரிடம் தலா ஐந்துலட்சம் ரூபா அறவிடப்பட்டுள்ளது காவல்துறை உயரதிகாரிகள் சிலரின்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை -ரணில் விக்கிரமசிங்க

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை என எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார் மேல்மாகாண சபைத்தேர்தலுக்கான இறுதி பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார் சுனாமி பேரழிவின்போது...

பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே பிரபாகரன் மறைந்திருக்கின்றார் -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி.பி.சி.க்கு தெரிவிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திலேயே மறைந்திருக்கின்றார் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தை நெருங்கிச் செல்லும்போது அவர் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் என இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார் பிபிசியின் சிங்கள செய்தி சேவையான...

பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஒரு சில மணி நேரமே உள்ளது -ஜனாதிபதி

பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்;புவதற்கு இன்னும் ஒரு சில மணித்தியாலங்களே இருக்கின்றன இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க சந்தர்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எதிர்கட்சித் தலைவருடன் வெற்றுத்தனமான விவாதம் நடத்த எமக்கு நேரமில்லை என்று...

யுத்த நிலைவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

யுத்த நிலைவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் பாராளுமன்றத்தின் பலகட்சிப் பிரதிநிதிகள், இலங்கை மனிதாபிமான நிலைவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு...

மக்கள் மீட்பு தொடர்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம்..!!

புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நேற்றையதினம் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை யுத்த பூமியிலிருந்து மீட்டெடுத்தமை மாத்திரமல்லாமல், அவர்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்குத் தேவையான...

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ உடனடி நிதியுதவி தேவை: ஐ.நா.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கான மனிதநேயத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவசரமாக நிதியுதவி அவசியம் எனக் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வந்திருக்கும் மக்களுக்கான உணவுகள், உடுதுணிகள், தற்காலிக...

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் -ஐ.நா.பாதுகாப்பு சபை தலைவர் தெரிவிப்பு

‘எல். ரீ. ரீ. ஈ. ஒரு பயங்கரவாத இயக்கம். அப்பாவி சிவிலியன்களை இவர்கள் மனிதக் கேடயங்களாக உபயோகிப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்று. புலிகள் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு தமது பயங்கரவாத செயற்பாடுகளை கைவிட...

சேனைக்குடியிருப்புப் கிராமத்தில் அமைந்துள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் காரியாலயம்மீது தாக்குதல், ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்

அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த சேனைக்குடியிருப்புப் கிராமத்தில் அமைந்துள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காரியாலயத்தின்மீது நேற்றிரவு 10மணியளவில் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கிரனைட் கொண்டு...

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் வழங்கப்படும் இந்த விடுமுறையானது எதிர்வரும் 27ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள...

தடுமாறிய புலிகள் தப்பியோட்டமாம்.. வெறிகொண்ட புலிகள் முற்றுகையிடலாம்..

வளையர்மடம் தேவாலயத்தை புலிகள் இயக்கத்தினர் தங்களது நிலைகளில் ஒன்றாக உபயோகித்து வருகின்றனர் என்ற தகவல் ஏலவே கிடைத்திருந்ததே. ஆனால், அதுபற்றிய புதிய தகவல் ஒன்று அண்மையில் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதாவது, வளையர்மடம் தேவாலயத்தில் நிலை...

புலிகளின் மிக முக்கிய நபர்களில் ஒருவரும் நீதித்துறைப் பொறுப்பாளருமான பரா வவுனியா நலன்புரி முகாமில் மக்களோடு மக்களாக வந்து தஞ்சம்!!

தமிழர்களுக்கான போராட்டம் என்ற மயக்கு வார்த்தைக்கு மதிமயங்கி, தன்னையும் புலியாக இணைத்துக் கொண்டு, பிரபாவின் அதிகாரவெறிக்கு கட்டுப்பட்டிருந்ததினால், பிரபாவினால் புலிகள் இயக்கம் சீர்குலைக்கப்பட்ட போதும், தற்போதைய தோல்விகளுக்கு பிரபாவே காரணமான போதும் அதனை வாய்திறந்து...

யுத்த நிறுத்தம் புலிகளைப் பலப்படுத்த வழிகோரும் -ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்லுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுக்கவில்லை என அதன் தலைவர் க்லோட் ஹெலர் தெரிவித்துள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பொதுமக்கள் தப்பி...

வாழும் ஆசை கொண்ட பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் -தயாமாஸ்டர்

படையினரிடம் நேற்று (22) சரணடைந்துள்ள புலிகளின் இரு முக்கியஸ்தர்களான புலிகளின் மூத்த உறுப்பினரும் ஊடக ஓருங்கிணைப்பாளருமான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி, புலிகளின் முக்கிய ஆவணக்காப்பாளரும் மொழிபெயர்பாளருமான ஜோர்ஜ் என அழைக்கப்படும்...

படை நடவடிக்கைகளுக்கு விமானப்படையினர் கண்காணிப்பு வழங்கி உதவி -ஜனக்க நாணயக்கார

புதுமாத்தளன் பகுதியில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு விமானப் படையினர் கண்காணிப்பு வழங்கி உதவி வருகின்றனர். இதுதொடர்பிலான காணொளிகள், புகைப்படங்கள் என்பன ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டும் தரவேற்றப்பட்டும் இருந்தன இவ்வாறு விமானப்படைப் பேச்சாளர் ஜனக்க நாணயக்கார...

இராணுவத்தினரிடம் தஞ்சமடையும் மக்களுக்கு உதவ கடற்படையினர் நடவடிக்கை -டி.கே.பி. தஸாநாயக்க

விடுதலைப்புலிகளின் கட்டுப்ட்பாட்டுப் பகுதியிலிருந்து இரணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் நலன் கருதி கடற்படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி தஸாநாயக்க இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க பாலித்த கொஹன மலேசியா விஜயம்

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கொஹன மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார் மலேசியாவில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் உயர்வடைந்து செல்வதாக கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களையடுத்து கொஹன அங்கு அனுப்பி...

கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கேகாலை உடுப்பிட்டிய பகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றிபெற்ற குழுவினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்....

பாதுகாப்பு வலயத்தில் 1/3 பகுதி படையினரின் பூரண கட்டுப்பாட்டில்..

பாதுகாப்பு வலயத்தின் வடபகுதி முழுவதையும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் நேற்றுக்காலை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதற்கமைய, பாதுகாப்பு வலயத்தின் மூன்றில் ஒரு பங்கை படையினர் தமது...

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் காலை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்..

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் காலை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்துள்ள இராணுவ த்தின் 58வது படைப் பிரிவினரிடம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து...

புலிகள் என்றால் நாட்டுத் தலைவர்களும் ஏனையோரும் நடுங்கிய காலம் மலையேறி விட்டது -ஜனாதிபதி

புலிகள் என்றால் நாட்டுத் தலைவர்களும் ஏனை யோரும் நடுநடுங்கிய காலம் மலையேறிவிட்டது. நாட் டைச் சீரழிந்த புலிகள் அழியும் காலமிது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க யுத்த நிறுத்தமொன்றை ஏற்படு...

புலிகளின் தயாமாஸ்டர் ஜோர்ஜ் ஆகிய இருவரும் இராணுவத்திடம் சரண்.. -இராணுவத் தலைமையகம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் மற்றும் விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் மொழி பெயர்ப்பாளராக விளங்கிய ஜோர்ஜ் ஆகியோர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது இவர்கள் இருவரும்...

பாரிஸில் இலங்கைத் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 210 பேர் கைது

இலங்கைத் தமிழர்களின் அவலநிலை தொடர்பாக பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 210 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த...

கொள்ளையிட வந்தவர்களுக்கு வேட்டு வைத்த வர்த்தகர்..

வீட்டில் நுழைந்து கொள்ளையிடும் நோக்கில் பலவந்தமாக உட்பிரவேசித்த கொள்ளையர் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கொள்ளையர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என...

பஸ் வான் மோதி அறுவர் காயம்

இ.போ.ச பஸ் ஒன்றம் வானும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6பேர் கடுங்காயங்களுக்கு உள்ளாகி கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.00மணியளவில் அட்டன் மாணிக்கம்பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக அட்டன் டிம்புள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது. அட்டனிலிருந்து...

சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றியவர் மரணம்

ஹிங்குராங்கொட பக்கமூன புதுவருட சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் வேகமாக சென்று கொண்டிருந்த சைக்கிள் பாதையை விட்டுவிலகி குழியொன்றுக்குள் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் நிமல்...

கெக்கிராவையில் துப்பாக்கிச்சூடு.. இருவர் வைத்தியசாலையில் அனுமதி

அநுராதபுரம் கெக்கிராவையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைநத் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது மகளை பஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மகளின் கழுத்திலுள்ள தங்கச்சங்கிலியை...

பாதுகாப்பான இடங்களை நோக்கி பொதுமக்கள் வருகை தந்தமை வரவேற்கத்தக்கது பான் கீ மூன்

பாதுகாப்பான இடங்களை நோக்கி அதிகளவிலான பொது மக்கள் வருகை தந்தது வரவேற்கத்தக்க விடயம் என ஜ.நா பொது செயளாளர் பான் கீ மூனின் ஊடக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மோதல் நடைபெறும்...

வன்னியில் இறுதிக்கட்டமோதலில் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் -யுனிசெப் எச்சரிக்கை

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்று வரும் இறுதிக்கட்ட போராட்டம் காரணமாக சிறுவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என யுனிசெப் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது இராணுவத்தினரின் தொடர்ச்சியான தாக்குதலாலும் புலிகள் பொதுமக்களை தடுத்து...

உரிமைகள் காப்பகம் அவசர அழைப்பு

வன்னியில் இரத்தஆறு ஒன்று ஒடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணிநேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் அவசர கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை...

புதுமாத்தளன் வைத்தியசாலைப் பகுதியை இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பு

இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பிரதேசத்தில் இருக்கும் புதுமாத்தளன் மருத்துவமனைப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை இராணுவம் போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் கிழக்கு கடற்கரை...

வவுனியா பெண்நோயியல் நிபுணர் சுட்டுக்கொலை

வவுனியா பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் நிபுணராகிய (வீ.ஓ.ஜி)) டாக்டர் மீரா மொஹீதீன் நேற்றுமாலை 7.00மணியளவில் தோணிக்கல் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு காயத்துக்கு உள்ளான அவர்...

விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது -ரணில் விக்கிரமசிங்க

விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டபோது தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் புதிய அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதனுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தான் விரும்புவதாக...

பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40 வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில்..

பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் விசா இன்று நாட்டில் தங்கியிருந்ததால் கைதுசெய்யப்பட்டதாக திணைக்களத்தின் உதவி...