பிரபாகரன் கிழக்கு பகுதிக்கு தப்பினார்???
வன்னி போர் முனையிலிருந்து பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரும் தப்பிச் சென்றுவிட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் தலைவர்...
லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்: 5 தமிழர்கள் கைது
லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாக 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் போர் நிறுத்ததை வலியுறுத்தி பிரிட்டன் வாழ் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ்...
உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதைப் போல அல்லாமல், கனரக ஆயுதங்கள் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம்...
போர்நிறுத்தம் இல்லை; அனைத்து மக்களும் விடுவிக்கப்படும் வரை மீட்பு நடவடிக்கை தொடரும்: ஜனாதிபதி
விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் மக்களில் இறுதியாகவுள்ள ஒருவர் மீட்கப்படும் வரை மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்துக்குள் இன்னமும் விடுதலைப் புலிகள் இருப்பதாக புலனாய்வுத்...
ஜோன் ஹோல்ம்ஸ் வவுனியாவுக்கு சென்றுள்ளார்
இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் செட்டிகுளம் நலன்புரி முகாம்களுக்கு சென்றுள்ளார். நேற்று திங்கட்கிழமை நலன்புரி முகாம்களுக்கு சென்றுள்ள ஜோன் ஹோல்ம்ஸ், அங்கிருக்கும் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன்,...
அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்கவேண்டும்: பிரித்தானியா
விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக்குப் பதிலாக இலங்கை அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்க வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் மூலம் மோதல்ப் பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறமுடியுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட்...
சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அனுமதி மறுப்பு
சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட்டின் இலங்கை விஜயத்துக்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய வெளிவிவகராச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர் மற்றும் சுவீடன்...
கல்முனையில் நகை வியாபாரி குத்திக்கொலை
கல்முனையை சேர்ந்த நகைவியாபாரியான அஹமது லெப்பை றபீக்தீன் வயது38 என்பவரே இனந்தெரியாத ஆயுததாரிகளினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகளின் தந்தையான கல்முனைக்குடியை சேர்ந்த அஹமது லெப்பை றபீக்தீன் என்பவர் நேற்ற முன்தினம் பி.ப சம்பாந்துறை...
கல்கிசை பஹத்தோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
மேல் மாகாணசபைத் தேர்தல் தினத்தன்று கொழும்பு புறநகர்ப் பகுதியான கல்கிசை பஹத்தோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேச வீடொன்றில் இருந்தபோதே சந்தேகநபர்...
மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது காவலாளி சூடு, ஒருவர் பலி
புத்தளம் மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது தோட்டக் காவலாளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 8.30அளவில் இடம்பெற்றதாகவும், சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பஸ்தரான 48வயதுடைய பீ.எம்.சுமதிபால எனவும்...
புலிபாய்ந்தகல் கூழாங்காடு பகுதியில் வெட்டபட்டிருந்த ஆழமான கிணறு ஒன்றுக்குள் நேற்றுக்காலை தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பட்ட புலிபாய்ந்தகல் கூழாங்காடு பகுதியில் வெட்டபட்டிருந்த ஆழமான கிணறு ஒன்றுக்குள் நேற்றுக்காலை தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏழு வயது, ஒன்பது வயது பத்து வயதுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு...
மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்: போர்நிறுத்தமில்லை என்கிறது இராணுவம்
மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும்இ இது போர்நிறுத்தம் இல்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தும்...
உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் தமிழக முதல்வர்
இலங்கையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படவேண்டுமெனக் கூறி தமிழக முதல்வர் மு.கருணாநிதி மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலை அண்ணா நினைவிடத்துக்குச் சென்ற மு.கருணாநிதி திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த...
பிரித்தானிய, பிரான்ஸ், சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை விரைவு
பிரித்தானிய, பிரான்ஸ் மற்றும் சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் இவர்கள் இலங்கை வரப்போவதாக அறிவித்துள்ளனர். “பிரித்தானிய வெளிவிவகாரச்...