மகேஸ்வரன் கொலை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டது

கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது கொழும்பு குற்றத்தடுப்புப்...

ஜயந்த விக்கிரமரத்ன இலங்கை பொலிஸ்மா அதிபராக ஜூலை 2ல் பதவியேற்பார்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ண எதிர்வரும் ஜூலைமாதம் 2ம்திகதி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா எதிர்வரும் 30ம் திகதி ஓய்வு...

வெள்ளவத்தையிலும் புறக்கோட்டையிலும் தமிழ் இளைஞர்கள் இருவர் கடத்தல்

கொழும்பில் இரண்டு இடங்களில் தமிழர் இருவர் நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் வெள்ளவத்தை கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அனுமதியை...

இருவேறு பஸ் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 60பேர் காயம்

நாட்டில் இருவேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் மாணவ மாணவிகள் 15பேர் உட்பட 60பேர் படுகாயமடைந்தனர் கித்துல்கலையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸொன்று எட்டியந்தோட்டை அலிவத்தை பகுதியிலுள்ள களனி ஆற்றுக்கருகில் தடம்...

குணசீலன் மீதான படுகொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் -EPDP

வாழைச்சேனையில் கடந்த 20 ஆம் திகதி T.M.V.P யினரால் கடத்தப்பட்ட எமது உறுப்பினர் காளியப்பன் குணசீலன் (27.06.2008) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான இவரை T.M.V.P யின் வாழைச்சேனை பொறுப்பாளர் அஜித் தலைமையிலான...

திருகோணமலை பாலையூற்றில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

திருகோணமலை பாலையூற்றுப்பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்;டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 33வயதான ஜேசுதாஸ் ராஜன் கிருஷ்டி என்பவரே மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்டவராவார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் இவர் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் முகாமையாளர் என...

யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டிற்குள்ளிருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டிற்குள்ளிருந்து வதீஸ்வரன் என்கிற 21 வயது இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்ட இச்சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளை வைத்து விபசாரம்: அமெரிக்காவில் நடந்த அதிரடி வேட்டையில் 300 பேர் கைது

அமெரிக்காவில் நடந்த அதிரடி வேட்டையில், சிறுமிகளை வைத்து விபசாரம் நடத்திய 300 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் சிறுமிகளை வைத்து விபசாரம் நடப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லாரி போக்குவரத்து...

கொழும்பில் புலிகளை மறைத்து வைத்திருந்த சிங்களப் பெண்

கொழும்பு பிரதேசத்திலும் மற்றும் ஜனநெருக்கடி மிகுந்த புறநகர்ப் பகுதிகள் உட்பட கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதற்காக அப்பகுதிகளுக்கு வருகின்ற புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்குச் சிங்கள இனத்தவர்களும் பல்வேறு...

எவ்வித அர்த்தங்களையும் இந்தியா பிரயோகிக்கவில்லை அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்து உள்ளார்

இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கமாறு இந்தியா இதுவரையிலும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

வவுனியா சிராட்டிக்குளத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற பாரிய மோதல்.. புலிகளின் இருபத்தைந்து சடலங்கள் மீட்பு! புலிகளின் நிலத்தடி பாரிய முகாம் ஒன்றையும் படையினர் மீட்டுள்ளனர்!!

வவுனியா சிராட்டிக்குளத்தில் நேற்றுமாலை 6மணியளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது புலிகள் தரப்பில் 25பேர் கொல்லப்பட்டுள்ளனர். சடலங்கள் அனைத்தையும் படையினர் மீட்டுள்ளனர். ரி56 துப்பாக்கி 16, 12.7 தர ஆயுதம் 01,...

இந்தோனேஷிய விமானம் மாயம்

இந்தோனேஷிய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று மாயமாகி விட்டதாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அந்த விமானத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த 13 பயணிகளும், 5 விமான குழுவினரும் இருந்ததாக...

கட்சித் தலைமையிலிருந்து ரணில் பதவி விலக வேண்டும் -லக்பிம நாளேடு செய்தி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவராக ருக்மன் சேனநாயக்க நியமிக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் உபதலைவர்...

மூதூரில் 17பேர் படுகொலை விடயம் பிரான்ஸ் சர்வதேச மயப்படுத்தும்..

2006 ஓகஸ்டில் மூதூரில் மனிதாபிமான பணியாளர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக பிரான்ஸ் அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன பிரான்ஸை தளமாக கொண்டியங்கும் பட்டினிக்கு...

நீண்ட ஆயுள் தரும் வைட்டமின் “டி”

நாம் கடவுளிடம் வைக்கும் பிரதான கோரிக்கைகளில் உடல் நலனுடன் கூடிய நீண்ட ஆயுள் என்பதே முதன்மையானதாக இருக்கும். அத்தகைய ஆயுள் எதனால் பெருகுகிறது என்பது குறித்து லண்டனில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பல புதிய...

கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினரொருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

ஒபாமாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பில் கிளின்டன் அறிவிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஒபாமாவுக்கு பில் கிளின்டன் ஆதரவு அளிப்பது தொடர்பில்...

ஓய்வு பெறுகிறார்: ைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரான பில்கேட்ஸ்

பல்லாண்டுகளாக உலகின் முதலாவது பணக்காரராக திகழ்ந்துவரும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவருமான பில்கேட்ஸ் அப்பதவியிலிருந்து நாளை மறுநாள் 27 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். கடந்த 33 வருடங்களாக மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின்...

நவாஸ் ஷரீப் தேர்தலில் போட்டியிட தடை கூடாது: பாகிஸ்தான் அரசு மேல் முறையீடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் பரூக் நயீக் நாடாளுமன்றத்தில்...

விடத்தல்தீவை நெருங்கும் இலங்கைப் படையினர் -(ஜெஸ்மின்)

இலங்கைப் படைகள் அடம்பனைக் கைப்பற்றியதைக்கூட புலிகள் இன்று வரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில் தற்போது அடம்பனையும் தாண்டி முள்ளிக்ண்டல். பாப்பாமோட்டை பகுதிகளையும் கைப்பற்றி ஏ-32 பாதையில் படிப்படியாக இராணுவ முக்கியம் வாய்ந்த விடத்தல் தீவை...

அதிக மேக்-அப், ஹீல் செருப்பு அணிய பெண்களுக்குத் தடை

பெண்கள் அதிக மேக்-அப் போட்டுக் கொள்ளவும், மிக உயரமான ஹீல் செருப்பு அணியவும் மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை மலேசியாவின் கோட்டா பாரு நகரில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல்...

இந்த வார ராசிபலன் (27.06.08 முதல் 03.07.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: நட்பு வட்டாரம் பெருகும். எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு: பண வரவு அதிகரிக்கும்....

பாகிஸ்தான் பழங்குடிகள் 28 பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவான அமைதிக் குழுவைச் சேர்ந்த பழங்குடியினர் 28 பேரை பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பிட்டானி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள் பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு...

08.06.2008ல் சிலாபத்தில் ஜே.வி.பி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..

ஜே.வி.பி ஏற்பாடு செய்திருந்த பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் புத்தளம் மாவட்டம் சிலாபம் ஆராய்ச்சிக்கட்டுவ நகரில் 08.06.2008ல் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் திடீரென...

செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பியை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலிருந்து ஈ.பி.டி.பி.யை உடனடியாக வெளியேறுமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த 23ம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தொடங்கியுள்ளனர். அண்மையில் மூன்று பேர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம்...

பேநசீர் படுகொலையால் எல்லாமே மாறிவிட்டது: முஷாரப் வேதனை

பேநசீர் புட்டோ படுகொலையால் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது: பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களை நானும், உள்நாட்டு நிர்வாகத்தை...

முதலமைச்சர் வேட்பாளர்களை நேற்று வெளியிட்டுள்ளது ஜே.வி.பி

சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கு ஜே.வி.பியின் சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர்களை அக்கட்சி நேற்று அறிவித்தது அதன்படி வடமத்திய மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக ஜே.வி.பியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்...

பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி முன்னிலையில் இஸ்ரேல் காவலர் தற்கொலை

இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி முன்னிலையில் இஸ்ரேல் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் காரணமாக பென்குரியான் விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது....

இந்தியாவில் கிட்னி மோசடி: 3 கிரேக்க பெண்கள் கைது

டெல்லியில் சமீபத்தில் சட்டவிரோதமாக கிட்னி ஆபரேசன் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக டாக்டர் அமித்குமார் கைது செய்யப்பட்டார். வெளிநாடுகளில் இருந்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வரும்...

கருணைக் கொலை கோரும்: லக்னோ சிறையில் 19 ஆண்டு காலமாக வாடும் கைதி

லக்னோ சிறையில் 19 ஆண்டு காலமாக வாடும் அரசியல்வாதி ஒருவர் தம்மை கருணைக்கொலை செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேரா பகதூர் சிங். கடந்த 1989ம் ஆண்டு இவர்...

ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

ஜெர்மனியில் உள்ள நூரன்பெக் நகரில் தியாகிகள் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகள் இரவு 9 மணிவரை நடைபெற்றது. தோழர்கள், நண்பர்கள் உட்பட பெருமளவானோர் இந்தவைபவத்தில் கலந்துகொண்டனர். ஐரோப்பா...

நடிகர் ரஞ்சன் ராமநாயக்கா ஐ.தே.க சார்பில் களமிறங்குகிறார்

பிரபல சிங்களத் திரைப்பட நடிகரும் ஐக்கிய தேசிய கட்சியின் சீதுவை நகர அமைப்பாளருமான ரஞ்சன் ராமநாயக்கா ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அவர்களுடன் சேர்ந்து செயல் படுவதில் அரசுக்கு தயக்கம் கிடையாது என்று இலங்கை அதிபர் வலியுறுத்தல்

நாட்டின் பாதுகாப்பே முக்கியம். எனவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அவர்களுடன் சேர்ந்து செயல் படுவதில் அரசுக்கு தயக்கம் கிடையாது என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் ராஜபக்சேவை மத பிரமுகர்கள் சந்தித்து...

தூங்கிப் போன பைலட்டுகள் -தப்பிய 100 பயணிகள்

மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளும் தூங்கிவிட்டனர். இதனால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே வந்துவிட்டது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த 15 நாட்களாகிவிட்ட நிலையில் இப்போது தான் வெளியில்...

சூரிச்சில் வீரமக்கள் தினம்- பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி

வீரமக்கள் தினம்-2008... 19ம் ஆண்டு நினைவு சுவிஸ் சூரிச்சில் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30மணிக்கு புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

சோதியா படையணியின் அடுத்த தலைவி சரிதாவும் கொல்லப்பட்டார்

அண்மைக்காலமாக புலிகள் இயக்கத்தின் முக்கிய பெண் புலிகள் படையணியாகிய சோதியா படையணியின் முன்னணி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதன் தற்போதைய தலைவி லெப்டினன்ட் கேணல் சரிதா அல்லது நிலானி அல்லது தர்மாவும் கடந்த 6...