வட-கிழக்கு இணைப்பை எதிர்க்கவில்லை. ஆனால் … – பிள்ளையான்
வட-கிழக்கு மாகாண இணைப்பை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் வட மாகாணத்திற்கான சம அந்தஸ்த்தும், உரிமைகளும் கிழக்கு மாகாணத்திற்கும் வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் முதனிலைப் பொறுப்பாளர் பிள்ளையான்...
சிவாஜி கணேசனின் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்தார்!
தமிழ்த் திரையுலகின் ஈடிணையற்ற நடிகராகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்! சென்னை கடற்கரையில் காமராஜர் சாலையில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள...
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் ஜெயிலில் இருந்து…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதி தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்...
ஈராக்கில் இருந்து ஜப்பான் ராணுவம் நாடு திரும்பியது
ஈராக்கில் பாதுகாப்புப்பணிக்காக அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜப்பான் 770 ராணுவ வீரர்களை அனுப்பி இருந்தது. இப்போது அங்கு இருந்து முதல் கட்டமாக 170 ராணுவ வீரர்கள் நேற்று ஜப்பான் திரும்பினார்கள். அவர்கள் தனியார் விமானம்...
லெபனானுக்கு ரூ.63 கோடி உதவி ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியது
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் விமானத்தாக்குதல் குறித்து கவலை தெரிவித்து உள்ள ஐரோப்பிய ஒன்றியம் அந்தநாட்டுக்கு 63 கோடி ரூபாயை உதவித்தொகையாக வழங்கி உள்ளது. லெபனானின் அவசரத்தேவைக்காக முதற்கட்ட உதவியாக...
இஸ்ரேலுக்கு ரஷியா கண்டனம்
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு ரஷியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்பதையும் கடந்து வெகுதூரம் போய்விட்டது என்று கூறி உள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட 2 இஸ்ரேலியர்களை...
லெபனான் மீது 12 போர் விமானங்கள் 23 டன் குண்டுகள் வீச்சு
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் மீது 12 போர்விமானங்கள் 23 டன் குண்டுகளை வீசித்தாக்கின. இதில் ஹெஸ்புல்லா தீவிரவாதிகளின் தலைவர்கள் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இதை ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் மறுத்தனர். இஸ்ரேல்...
கடலில் தவித்த 30 பேரை கண்டுபிடித்த செயற்கைகோள்: இந்திய கடற்படை மீட்டது
பனாமா நாட்டைச் சேர்ந்த "குளோரி மூன்'' எனும் கப்பல் ஒன்று இலங்கை கடல் பகுதியில் கடந்த 11-ந்தேதி சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 30 பேர் இருந்தனர். நடுக்கடலில் கப்பலில் திடீரென தீ பிடித்தது....
பாகிஸ்தானில் கற்பழிப்பில் ஈடுபட்ட 3 பேர் தூக்கிலிடப்பட்டனர்
பாகிஸ்தானில் உள்ள ஷேக்கப்புரா நகரில் வசிக்கும் 3 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கடந்த 2000-ம் ஆண்டு கற்பழித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதித்தது....
லெபனான் நாட்டில் இஸ்ரேல் விமானத்தாக்குதலில் 300 பேர் பலி
லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 8 நாட்களாக விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மொத்தம் 300 பேர் பலியானார்கள். கிட்டத்தட்ட 500-க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை...
வடகொரியாவில் வெள்ளத்துக்கு 100 பேர் பலி
வடகொரியாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை காரணமாக 100 பேர் பலியானார்கள். தென்கொரியாவிலும் பலத்த மழை பெய்தது. அங்கு 29 பேர்...
ஜிடேனுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்; துராமுக்கு மெட்டராஸி காட்டமான பதில்
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜிடேன் நடந்து கொண்ட விதத்துக்கு லிலியன் துராம் வக்காலத்து வாங்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட இத்தாலி வீரர் மெட்டராஸி கூறியுள்ளார். "பிரெஞ்சு கால்பந்து அணியின் காப்டன்...
மருதனார்மடத்தில் கிளைமோர் தாக்குதல்: 3 இராணுவம் பலி- 14 பேர் படுகாயம்
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்று கொண்டிருந்த பேரூந்து கிளைமோர் தாக்குதலில் சிக்கியதில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உடுவில், சுன்னாகத்தை சேர்ந்த வி.கஜந்தன் (வயது 21), கே.துரைராஜா...
சுனாமி பலி 525 ஆக உயர்வு: கடற்கரையில் தோண்ட, தோண்ட பிணங்கள்
இந்தோனேஷியாவின் ஜாவா தீவு அருகே கடந்த திங்கட்கிழமை மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கட லுக்கு அடியில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக் கத்தால் `சுனாமி' பேரலை கள் உருவாகி கடற்கரை...
லெபனான் மீது விடிய விடிய குண்டு வீச்சு: பொது மக்கள் 254 பேர் பலி
இஸ்ரேல் ராணுவ வீரர்கள 2 பேரை லெபனானில் உள்ள ஹிஸ்டில்லா இயக்கத்தினர் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவத்தின் முப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இந்த தாக்குதல்...
இந்தோனேசியாவை 2-வது முறையாக உலுக்கி எடுத்த சுனாமி உயிரிழந்தோர் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது
இந்தோனேசியாவை 2-வது முறையாக தாக்கிய சுனாமியில், பலியானோர் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்து உள்ளது. கடற்கரை பகுதிகளில் இருந்து குவியல், குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன. கடலோரத்தில் மரக்கிளைகளில் ஏராளமான பிணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. 160-க்கும்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிருக்கு பிடிவாரண்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் கடந்த 1993-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அப்போது அவர்கள் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்த சொத்துக்கணக்கில் தவறான தகவல்...
ஜப்பான் மன்னர் குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்குமா?
ஜப்பான் மன்னர் அகிகிட்டோ வின் இளையமகனின் மனைவி கிகோ கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. 39 வயதான அவருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் அறுவைச்சிகிச்சை மூலம்தான் குழந்தையை வெளியே...
தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் வயோதிபர் பலி! 4 படையினர் படுகாயம்.
தென்மராட்சி கொடிகாமம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் படையினர் பயணித்த வானத்தை இலக்கு வைத்து கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு வெடிக்க வைக்கப்பட்டு்ள்ள கிளைமோர் தாக்குதலில் வாகனத்தில் பயணித்த நான்கு...
புளொட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளர் தலைமையிலான…
புளொட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளர் தலைமையிலான துாதுக்குழுவினரின் சர்வதேச பிரதிநதிகளுடனான சந்திப்புகள்…– புளொட் சர்வதேச பொறுப்பாளர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான துாதுக்குழுவினர் சுவிஸின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகள் திருமதி. லுயிஸ்...
இந்தோனேசியாவில் `சுனாமி’ தாக்குதலில் 306 பேர் பலி: கடலில் மூழ்கிய 160 பேர் கதி என்ன?
இந்தோனேசியாவில் 2004-ம் ஆண்டு நில நடுக்கம் ஏற்பட்டு அதை தொடர்ந்து உருவான சுனாமி பேரலையால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 2 லட்சத்து 83 ஆயிரம் பேர் பலியானார்கள். இதன் பிறகு அந்த பகுதியில்...
சீனாவில் புயலுக்கு 154 பேர் பலி
சீனாவில் பிளிஸ் என்ற புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஹுனான் மாநிலத்தில் 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இங்கு 78 பேர் பலியானார்கள். 100 பேரை...
இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு லெபனானில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருவதால் அங்கு தங்கி இருக்கும் அமெரிக்கர்கள், பிரிட்டிஷார், பிரஞ்சுக்கள் ஆகியோர் லெபனான் நாட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில்...
அவசர போலீசுக்கு காதல் வலை வீசிய பெண்
அமெரிக்காவில் வாஷிங்டனை சேர்ந்த பெண் டுடாஷ். அவர் பக்கத்து வீட்டாரால் எழுப்பப்பட்ட இரைச்சலைத் தொடர்ந்து அவசர போலீசுக்கு டெலிபோன் செய்தார். போலீஸ்காரர் ஒருவர் விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினார். அதன் பிறகு டுடாஷ் மீண்டும்...
ஈராக்கில் துப்பாக்கியால் சுட்டு 40 பேர் பலி
ஈராக்கில் உள்ள மக்முதியா நகரில் உள்ள மார்க்கெட்டில் கார் குண்டு வெடித்தது. அதே நேரத்தில் சில கார்கள் அங்கு வந்தன. அதில் ஆயுதங்களுடன் இருந்த சிலர் துப்பாக்கியால் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர்....
மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது
உலகம் முழுவதும் இப்போது 7 ஆயிரம் மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால் மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது. இது இப்படியே நீடிக்குமானால் அடுத்த 100 ஆண்டுகளில் 2ஆயிரத்து 500 மொழிகள் மட்டுமே இருக்கும்....
இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு: 9 லெபனான் வீரர்கள் பலி
லெபனானின் ஹெஸ் புல்லா இயக்கத்தினர் இஸ்ரெல் வீரர் ஒருவரை கடத்தி சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பீரங்கி படையும் லெபனானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது....
விவசாயத்தில் நஷ்டம்: தற்கொலைக்கு அனுமதி கேட்டு 35 விவசாயிகள் ஜனாதிபதிக்கு கடிதம்
மராட்டிய மாநிலம் விதர்பா பிராந்தியத்தில் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தால் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 13 மாதத்தில் 658 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 45 நாளில் 104 பேர் தற்கொலை...
இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவை இன்று மிக சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் இது 7. 2 என்ற அளவுக்குப் பதிவானது. இதில் குறைந்தபட்சம் 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த பூகம்பத்தையடுத்து ஜாவா, சுமத்ரா, பாலி,...
சீனாவில் புயல்மழைக்கு 97 பேர் பலி
சீனாவை பிளிஸ் என்ற புயல் தாக்கியது. இந்தப்புயல் பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளைத் தாக்கி விட்டு சீனாவைத்தாக்கியது. இதில் 97 பேர் பலியானார்கள். ஹுனான் மாநிலத்தில் தான் பலத்தசேதம் ஏற்பட்டு உள்ளது. 31 ஆயிரம்...
இஸ்ரேல் டாங்கி படை பாலஸ்தீனத்துக்குள் புகுந்தது: லெபனானிலும் விமான தாக்குதல்
லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தினர் சிலரை கொன்று விட்டு 2 பேரை கடத்தி சென்றனர். இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாக குண்டு வீசி தாக்கி வருகிறது....
பவன் படுகொலை தொடர்பில் புளொட் விடுத்துள்ள அறிக்கை
கடந்த 12ம் திகதி இரவு வவுனியாவில் புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் செட்டிகுளம் பிரதேசத்தில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட புளொட்டின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இரத்தினம் சிறீகாந்தராஜா (பவன்) அவர்களின் பூதவுடல்...
புலிகளின் கைக்கூலிகளை புலிகளே தெரியப்படுத்துகின்றனரா?
புலி சார்பு இணையதளமும், மற்றும் ஊடகமொன்றும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான புளொட் உறுப்பினர்கள் என்று அண்மையில் கொல்லப்பட்ட புளொட்டின் வவுனியா அமைப்பாளர் ரட்ணம் சிறீகாந்தராஜா (பவன்), மற்றும் முன்னர் கொல்லப்பட்ட தர்மலிங்கம் (வித்தி) மற்றும்...
கொலம்பஸ் ஒரு கொடுங்கோலன்!
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஒரு சர்வாதிகாரியாக, கொடுங்கோலனாக இருந்தது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் வட பகுதியில் உள்ள சிமான்காஸ் ஆய்வு மையத்தில் கொலம்பஸின் ஆரம்ப காலம் குறித்த சில...
பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் மதத்தலைவர் படுகொலை
பாகிஸ்தானில், பெரும்பான்மையாக உள்ள சன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் இதுவரை ஏராளமான பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள கராச்சி நகரில்...
60 அடி உயர மாடியில் இருந்து பூனையை தூக்கி வீசியவருக்கு ஜெயில் தண்டனை
இங்கிலாந்து நாட்டில் உள்ள பெர்மிங்காம்நகரில் வசிக்கும் கிறிஸ்டோபர் லீ (வயது 18), தனது நண்பர்களுடன் சேர்ந்து விபரீத விளையாட்டில் ஈடுபட்டார். 60 அடி உயரமுள்ள மாடியின் பால்கனியில் இருந்து ஒரு பூனையை தூக்கி வீச...
சிறுமி வயிற்றில் இருந்த 25 கிலோ கட்டி அகற்றப்பட்டது
நேபாளநாட்டின் கிழக்குப்பகுதியில் இருக்கும் பிராத் என்ற இடத்தை சேர்ந்த சிறுமி ஐதமாயா லிம்பு(வயது 11). இவளது வயிறு உப்பி அதனால் அவதிப்பட்டாள். அவள் கர்ப்பம் அடைந்து இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து...
ஈராக்கில் துப்பாக்கி முனையில் ஒலிம்பிக் குழு தலைவர் உள்பட 52 பேர் கடத்தல்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு மாநாட்டு கூடத்தில் அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் ஈராக் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அகமது அல்-ஹத்ஜியா,...
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை
இலங்கையில் சந்திரிகா அதிபராக இருந்தபோது அவரை கொல்வதற்கு விடு தலைப்புலிகள் பலமுறை குறி வைத்தனர். ஒரு தடவை மனித வெடிகுண்டு தாக்குதலில் சந்திரிகா மயிரிழையில் உயிர் தப்பினார். அவருடைய ஒரு கண் பாதிக்கப்பட்டது. இந்த...