சவூதியில் துப்பாக்கி சண்டை 6 அல்-காய்தா தீவிரவாதிகள் சாவு
அல்-காய்தா தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்கியதில் 6 தீவிரவாதிகள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர். சவூதி அரேபியா ரியாத் மாவட்டத்தில் ஒரு வீட்டில் அல் காய்தா தீவிரவாதிகள் இருப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. போலீஸôர்...
வவுனியாவில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
் வவுனியா மாவட்டம் வேப்பங்குளத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த விடுதலைப் புலிகள் இருவர்...
விமானப்படையினருக்கு ஆயுத விநியோகம் தலைநகரில் பலமணிநேரம் வாகன நெருக்கடி
இலங்கை விமானப்படையினருக்குக் கொண்டுவரப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் லொறிகள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டதால் கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் பலமணிநேரம் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலமணிநேரம் நிலவிய இந்த வாகன...
பரபரப்பான ஆட்டத்தில் டோகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு பிரான்சு தகுதி
உலக கோப்பை கால்பந்தில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதன் `ஜி' பிரிவில் பிரான்சு-டோகா அணிகள் மோதின. பிரான்சு அணி தான் மோதிய 2 ஆட்டங்களையும் டிராவில் முடித்திருந்ததால் 2-வது சுற்றுக்கு முன்னேற...
இடி மழையின்போது செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்கும் அபாயம்
இடி மழையின்போது வெளியிடங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்கும் அபாயம் உண்டு என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் லண்டனில் 15 வயது சிறுமி ஒருத்தி ஒரு பூங்காவில் இருந்தபோது அப்போது இடியுடன்...
உண்ணாவிரதத்தை சதாம்உசேன் முடித்துக்கொண்டார்
வக்கீல் கமீஸ் அல் ஒபைதி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயிலில் சதாம்உசேன் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தை நேற்றுமுன்தினம் பகல் அவர் முடித்து கொண்டார். இந்த தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்....
2-வது சுற்றில் சுவிட்சர்லாந்து 26-ந்தேதி உக்ரைனுடன் மோதல்
ஜி பிரிவில் நடந்த மற்றொரு கடைசி லீக் ஆட்டத்தில் சுவிட் சர்லாந்து-தென் கொரியா அணிகள் மோதின. இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று இருந்தது. இதனால் இரண்டு...
2005ம் ஆண்டு 4742 பேர் தற்கொலை
கடந்த ஆண்டு இலங்கையில் 4742 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பொலிஸ் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது. சென்ற ஆண்டு தற்கொலை செய்துகொண்டவர்களில் 3708பேர் ஆண்கள். 1034பேர் பெண்கள். இதேவேளை தற்கொலை செய்துகொண்டவர்களில் அநேகமானோர் வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளாவர்....
காலி ஆடைத்தொழிற்சாலையில் 21 யுவதிகள் விஷம் கலந்த உணவு உண்டு மயக்கம்.
காலி நுகதுவையில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 21 யுவதிகள் விஷம் கலந்த உணவினை உண்டதினால் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இராப்போசன உணவிலேயே நஞ்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கட்டுபெத்தவில் முற்றுகை.
சட்விரோதமாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று பொலிசாரால் முற்றுகையிடப்பட்டது. மொரட்டுவ கட்டுபெத்த அலங்கார என்ற கிராமத்தில் பிரமாண்டமான வீடொன்றை சுற்றிவளைத்த பொலிசார் அங்கிருந்த வேலைவாய்ப்பு சம்பந்தமான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட...