வங்க தேச கடலில் படகு கவிழ்ந்து பலர் சாவு

வங்கதேச கடலில் வியாழக்கிழமை படகு கவிழ்ந்ததில் பலர் இறந்தனர். வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து 216 கி.மீ. தொலைவில் உள்ளது சிட்டகாங். சாண்விப் தீவுப்பகுதியிலிருந்து சிட்டகாங்குக்கு சென்ற படகில் 70 பேர் பயணம் செய்தனர். அப்போது...

தென் கிழக்கு சீனத்தில் கனமழை: 55 பேர் சாவு; 12 பேரைக் காணவில்லை

சீன நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் ஃபூ ஜியான், குவாங் டாங், கிய் ஷோவ் ஆகிய 3 மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கு 55 பேர் பலியாகியுள்ளனர், 12 பேரைக் காணவில்லை. (more…)

பாகிஸ்தானில் அல்-காய்தா தாக்குதல்

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்குப் பகுதியில், அல்-காய்தா ஆதரவாளர்களின் தாக்குதல் தொடர்கிறது. வசீரிஸ்தான் என்ற பழங்குடி பகுதியில் மீர் அலி என்ற இடத்தில் சாலையோரம் போடப்பட்டிருந்த வெடிகுண்டு வியாழக்கிழமை திடீரென வெடித்தது. ராணுவ ரோந்து வாகனத்தை...

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவக்கம்!

உலகெங்கிலும் உள்ள பல கோடி கால்பந்தாட்ட ரசிகர்களின் கனவான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் துவங்குகின்றது! மாலை துவக்க விழாவிற்குப் பின்னர் நடைபெறும் முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி...

மிக்_29 போர் விமானம் நொறுங்கி விழுந்தது: விமானிகள் உயிர் தப்பினர்

குஜராத் மாநிலத்தில் ஜாம் நகர் என்ற இடத்திற்கு அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்_29 ரக போர் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்...

நார்வே சமரச முயற்சியில் `திடீர்’ முட்டுக்கட்டை பேச்சு வார்த்தைக்கு வர விடுதலைப்புலிகள் `திடீர்’ மறுப்பு

அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வர விடுதலைப்புலிகள் திடீரென மறுத்து விட்டனர். இதனால் நார்வே நாடு மேற்கொண்டுள்ள சமரச முயற்சியில் `திடீர்' முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. தங்களது புறக்கணிப்புக்கு இலங்கை அரசுதான் காரணம் என்று விடுதலைப்புலிகள்...

ரி.பி.சி கலையகத்தை தாக்கி விவேகானந்தனை கொலை செய்ய முயற்சி செய்த லண்டன் ராஜன் நிதர்சனம் சேது ஆகியோர் லண்டன் பொலிசாரால் கைது

நேற்று இரவு (08.06.06அன்றிரவு) 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வே நிதர்சனம் சேது உட்பட ஐந்து புலிக்குண்டர்கள் ரி.பி.சி...

சரத்குமார் ராஜிநாமா ஏற்பு

மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் நடிகர் சரத்குமாரின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத் ஏற்றுக் கொண்டிருக்கிறார். (more…)

கோயில் விழாவில் ரூ.785-க்கு விலைபோன எலுமிச்சம் பழம்

தமிழக பரமத்திவேலூர் தாலுகா பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் விழாவில் எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது. செங்கப்பள்ளியில் கடந்த ஒரு மாதமாக பொன்னர் சங்கர் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது....

ஈராக் அல் கொய்தா தலைவர் அல் சர்காவி விமானப்படை தாக்குதலில் மரணம்

அமெரிக்கா மற்றும் ஈராக் நாட்டு ராணுவம் சேர்ந்து நடத்திய விமானப்படை தாக்குதலில், ஈராக் நாட்டின் அல் கொய்தா தலைவர் அல் சர்காவி கொல்லப்பட்டார். இத்தகவலை ஈராக் பிரதமர் நௌரி அல் மலிகி தெரிவித்தார். இச்சம்பவம்...

சாதாரண உறுப்பினர்களுடன் பேசுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அமைச்சர் மட்டத்திலான பேச்சுக்கே தாம் தயாரென புலிகள் தெரிவிப்பு

சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதானால் அரசின் சாதாரண உறுப்பினர்களுடன் பேசுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அமைச்சர்மட்டத்திலான பேச்சுவார்த்தையில் மட்டுமே தாம் பங்குகொள்ளத் தயாரெனவும் தமிழ்செல்வன் நோர்வேயில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுடன் மட்டுமே தாம்...

மீண்டும் புதைகுழியில் இருந்து சடலங்கள்

நேற்று முன்தினம் 06-06-2006 அன்று சடலம் ஒன்று கோப்பாய் கைதடிக்கு இடையில் உள்ள பாலத்துக்கு அருகில் பற்றையில் இருந்து மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டது தெரிந்ததே. கோப்பாய் மத்தியைச் சேர்ந்த வைதீஸ்ரன் வெங்கட கிருஷ்ண...

விடுதலைப் புலிகளிடம் மூக்குடைபட்ட வெள்ளைப் புலிகளான நோர்வே

புரிந்தணர்வு உடன்படிக்கை என்னும் பெயரில் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஜனநாயகமுலாம் பூச முற்பட்ட நோர்வே அரசாங்கம் ஏற்கனவே இலங்கையில் செயற்பட்ட அனைத்து ஜனநாயக அமைப்புக்களையும் அழித்து ஒழி ப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டது. (more…)

ஐரோப்பாவில் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளால் வைப்பிலிடப்பட்டிருக்கும் பெருந்தொகையான பணம் வங்கிகளால் முடக்கப்படும் சாத்தியம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாக ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் இயக்கம் மீதான தடை அறிவிப்புகள்...

சுகோய் போர் விமானத்தில் பறந்தார் கலாம்: வரலாறு படைத்தார்

ஜனாதிபதி அஜனாதிபதி அப்துல் கலாம் இன்று சுகோய்30 ரக போர் விமானத்தில் பறந்தார். ஏற்கனவே நீர்மூழ்கியில் பயணம் மேற்கொண்ட கலாம் ரஷ்யாவின் சுகோய் போர் விமானத்தில் பறக்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து இந்திய விமானப்...

சதாமை விசாரிக்கும் கோர்ட் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது: பெண் வழக்கறிஞர் புகார்

இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனிடம் விசாரணை நடத்தும் தலைநகர் பாக்தாதில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று பெண் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் வாதாடினார்...

பொம்மை எலும்புக்கூட்டை தேடியவர்கள் நிஜ சடலத்தைக் கண்டுபிடித்தனர்

மறைத்து வைக்கப்பட்ட பொம்மை எலும்புக்கூட்டை கண்டுபிடிக்கச் சென்ற அமெரிக்க பள்ளி மாணவர்கள், நிஜ சடலத்தைக் கண்டு பிடித்தனர். அமெரிக்காவில், புளோரிடா மாவட்டத்திலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டதின் பகுதியாக குற்றவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது....

தீவிரவாதிகள் தாக்கி 3 பேர் சாவு

இராக் தலைநகர் பாக்தாதில் புதன்கிழமை நடந்த இரண்டு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். பாக்தாதின் கிழக்குப் பகுதியில் போலீஸôர் சென்று கொண்டிருந்த வாகனத்தின்...

மன்னார் வங்காலையில் கிளமோர்தாக்குதல் மூன்று இராணுவம் பலி

மன்னார் வங்காலையில இன்று காலை 8.30 மணியளவில் புலிகள் மேற்கொண்ட கிளமோர்தாக்குதலில் 3 படையினர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் படை அதிகாரி தரநிலையில் உள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது....

20 மணி நேரத்தில் எவரெஸ்டு சிகரம் ஏறி இறங்கினார் நேபாள இளைஞரின் உலக சாதனை

நேபாள இளைஞர் ஒருவர் 20 மணிநேரத்தில் எவரெஸ்டு சிகரத்தில் ஏறி இறங்கி உலகின் மிகவேகமான மலை ஏற்ற வீரர் என்ற சாதனை படைத்து இருக்கிறார். நேபாளத்தைச்சேர்ந்தவர் தவா ஷெர்பா. இவர் மலைஏற்ற வீரர் ஆவார்....

ஒரு மாத கால்பந்து திருவிழா ஜெர்மனியில் நாளை தொடக்கம்

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த உலக கோப்பை போட்டி 2002-ல் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் நடந்தது. இந்நிலையில் 18-வது உலக கோப்பை கால்பந்து...

பல்லிகளை சாப்பிடும் அதிசய வாலிபர் ஒரு நாளைக்கு 25 பல்லிகளை விழுங்குகிறார்

பல்லிகளை பார்த்தால் பலருக்கும் அறுவருப்பாக இருக்கும். மேலும் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டால் அதனால் ஏற்படும் விஷத்தன்மையால் வாந்தி-மயக்கம் ஏற்படும், உயிருக்கே கூட ஆபத்து உண்டாகலாம். ஆனால் ஒரு வாலிபர் பல்லியையே உணவாக சாப்பிடுகிறார்...

காங்கோ நாட்டில் கப்பலில் தீ விபத்து: 100 பேர் கருகி சாவு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ குடியரசு. இந்த நாட்டில் சாலை வசதிகள் மிகக்குறைவு. கப்பல் மற்றும் படகு போக்குவரத்துதான் அதிக அளவு நடைபெறுகிறது. இங்கு தஸ்கானியகா என்ற ஏரி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான புரூண்டி,...

பிந்திய செய்தி… நேற்றைய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10பேர் பலி – 14பேர் படுகாயம்

பிந்திய செய்தி... நேற்றைய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10பேர் பலி - 14பேர் படுகாயம் - புலிகளின் நிர்வாகப்பகுதியில் சம்பவம் மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் கண்ணிவெடியில்...

பஹ்ரைனில் முதல் பெண் நீதிபதி

ஜூன் 8: வளைகுடா நாடுகளில், பெண்ணுக்கு நீதிபதி பதவியளித்த முதல் நாடு என்ற பெருமையை பஹ்ரைன் பெற்றுள்ளது. பஹ்ரைனைச் சேர்ந்த மோனா ஜெசெம் அல் கவாரி வளைகுடா நாடுகளில் முதல் பெண் நீதிபதியாவார். அவரை...

வவுனியா பிரபல வர்த்தகர் பி.எஸ் அப்துல்லாவின் வர்த்தக நிலையத்துக்கு கிரனேட் வீச்சு

வவுனியா பிரபல வர்த்தகர் பி.எஸ் அப்துல்லாவின் வவுனியா வர்த்தக நிலையத்தின் மீது கிரனேட் வீசப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பி.எஸ். அப்துல்லா வவுனியா வர்த்தக சங்கத் தலைவரும், யுத்தநிறுத்தக்...

மட்டக்களப்பு வைத்தியசாலை காவலாளி படுகொலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ஆரையம்பதியைச் சேர்ந்த 25வயதுடைய சிவலிங்கம் ரஜனிகாந்த் நேற்று பிற்பகல் 4மணியளவில் வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். (more…)

அவசரகால சட்டம் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது அதனை வாக்கெடுப்புக்கு விடுமாறு தமிழ்கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜா கேட்டதற்கமைய வாக்கெடுப்புக்கு பிரேரணை விடப்பட்டது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 102வாக்குகளும்,...

கொழும்பு நவகம்புறயில் தீவிபத்து

கொழும்பு கிராண்ட்பாசை அண்மித்த நவகம்புர ஸ்டேஸ்புர பகுதியில் இன்றுமாலை 4.30மணியளவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 60குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்குரிய பாதை வசதியின்மையால் விரைவில் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப்...

கனடா பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு டென்மார்க்கிலும் தொடர்பு.

கனடாவில் அல் குவைடா பாணியிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இதுவரை 17 பேர் வரை கைதாகியுள்ளனர். இவர்களில் சிலருக்கும் டென்மார்க்கில் உள்ள தீவிரவாத போக்குடைய சிலருக்கும் தொடர்பிருப்பதாக போலீஸ் தெரிவிக்கிறது....

அளவையில் பயணிகள் பஸ்ஸில் கைக்குண்டு மீட்பு

குருநாகலிருந்;து கொழும்பு நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸி;ல் இருந்து நேற்று (05.06.206) கைக்குண்டு ஒன்று அளவை பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறிப்பிட்ட பஸ்ஸை அளவை பொலிஸார் சோதனையிட்டபோது கைக்குண்டு...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அல்லைப்பிட்டி மக்களுடன் நேரில் சந்திப்பு

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள அல்லைபிட்டி மக்களை, அவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள யாழ். அடைக்கலமாதா தேவாலயம், நாவாந்துறை புனித நீக்கிலார் தேவாலயம் அகிய இடங்களுக்கு, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான...

பிந்திய செய்திகள் – கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.

மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஆபுhதாரிகள் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின்...

திண்டிவனம் அருகே ஆட்டோ கிணற்றில் விழுந்தது 5 பேர் நீரில் மூழ்கி பலி

திண்டிவனம், கூட்டேரிபட்டு அருகே ஆட்டோவில் சென்ற 5 பேர் கிணற்றில் விழுந்து பலி. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கூட்டேரிபட்டு அருகே உள்ளது. சின்னநெற்குணம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 6 வாலிபர்கள் புதவைக்கு சென்று திரும்பிய...

கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.

மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஆபுhதாரிகள் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின்...

தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம்

கொழும்பிலிருந்து பாங்கொங்க் புறப்பட்டுச் சென்ற தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஜுன் 3 ஆம் நாள் தாய் ஏர்வேஸ் இண்டர்நேசனல் விமானம் டிஜி...

மூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கை வெற்றிகரமாக நீக்கம்

மூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கையை மருத்துவர்கள் திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை செய்து நீக்கினர். அறுவைச் சிகிச்சை முழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. (more…)

வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஈரான் விருப்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, ரஷியா ஆகிய 5 நாடுகளோடும் மற்றும் ஜெர்மனியோடும் அணு சக்தி பிரச்சினை குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த...

பாக்தாத், பழப்பெட்டியில் 8 மனிதத் தலைகள்!

இராக் தலைநகர் பாக்தாத் அருகே, பழம் எடுத்துச்செல்ல பயன்படும் அட்டைப் பெட்டியில் 8 மனிதத் தலைகள் இருப்பது தெரியவந்தது. பாக்தாதின் வடகிழக்கே உள்ள பகுவா நகருக்கு வெளியே நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த பெட்டி இருப்பதை...