விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் தடை; இலங்கை அரசுதிடீர்நடவடிக்கை

Read Time:1 Minute, 42 Second

இலங்கையில் விடுதலைப்புலிகள் பல ஆண் டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை தடுக்க அந்த இயக்கத்துக்கு இலங்கை அரசு தடை விதித்தது. கொழும்பு மத்திய பாங்கியை விடுதலைபுலிகளின் தற்கொலை படைதாக்குதல் நடத்தியதை தொடர்ந்து 1998-ம்ஆண்டு இந்த தடை விதிக்கப்பட்டது. விக்ரமசிங்கே பிரதமராக இருந்த போது விடுதலைப்புலிகளுக்கும் ராணு வத்துக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையொட்டி கடந்த 2002-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் ராஜபக்சே அதிபர் பதவிக்கு வந்ததும் இரு தரப் பினருக்கும் மீண்டும் போர் தீவிரம் அடைந்தது. இதே நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் தடை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சில கட்சிகள் விடுதலைபுலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்க வற்புறுத்தி வருகின்றன. அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. இதில் சிங்கள கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒயினாபிஷேகம்
Next post நடிகர் கமல் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு