வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பெனாசிர் `திடீர்’ விடுதலை : பாராளுமன்றம் கலைப்பு; புதிய பிரதமர் நியமனம்

Read Time:3 Minute, 27 Second

பாகிஸ்தானில் கடந்த 3-ந்தேதி நெருக்கடி நிலையை அதிபர் முஷரப் அமுல் படுத்தி னார். இதை அடுத்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். நெருக்கடி நிலையை ரத்து செய்யக் கோரியும், ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யக் கோரியும் முன்னாள் பிரதமர் பெனாசிர் கடந்த 13-ந்தேதி லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு தடையை மீறி பேரணி புறப்பட்டார். ஆனால் பேரணி புறப்படு வதற்கு முன்பே போலீசார் அவரை சுற்றி வளைத்து லாகூரில் வீட்டுக்காவலில் வைத்தனர். பெனாசிர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது இது 2-வது தடவை. அவரை 7 நாள் காவலில் வைக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பெனாசிரை விடுதலை செய்யும் படியும் நெருக்கடி நிலையை ரத்து செய்து ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தும்படியும் அமெரிக்க அதிபர் புஷ் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் இன்று பாகிஸ்தான் வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பெனாசிர் திடீர் என்று விடுதலை செய்யப்பட்டார். அவரது வீட்டுக்காவல் ரத்து செய்யப்பட்டு விட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் அவரது வீட்டை சுற்றி போலீசார் காவலுக்கு நிற்கிறார்கள். பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பெனாசிருக்கு பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். வீட்டுக்காவலில் வைக்கப் பட்ட மனித உரிமை இயக்க தலைவர் அஸ்மாஜாங்கிரும் விடுதலை ஆனார்.

இந்த நிலையில் முஷரப்புக்கு எதிராக பெனாசிர் ஆதர வாளர்கள் போராட்டம் நீடிக்கிறது. நேற்று கராச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் குண்டு பாய்ந்து 2 சிறுவர்கள் பலியானார்கள். இந்த நிலை டிசம்பர் 1-ந்தேதி தளபதி பதவியில் இருந்து விலகுவதாக முஷரப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாராளு மன்றம் நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது. இடைக்கால பிரதமராக செனட்சபை தலை வர் முகமதிமியான் சோம்ப் ரோவை அதிபர் முஷரப் நியமித்துள்ளார். அவர் இன்று பதவி ஏற்றார். ஜனவரி மாதம் தேர்தல் நடப்பது வரை இவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காதலி ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்கும் காதலன்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… (அழகிகள்! உலகப் பேரழகிகள்!!)