பவானியில் ஓடும் காரில் தீ விபத்து: வாலிபர் உயிர் தப்பினார்..!!

Read Time:1 Minute, 33 Second

timthumb (2)பவானியை அடுத்த எலவமலை ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் மாரிமுத்து (41).

இவர் தனது காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக ஒர்க் ஷாப்புக்கு நேற்று ஓட்டிச் சென்றார்.

மேட்டு நாசுவம் பாளையம் பாரதி நகர் அருகே சென்றபோது காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும் புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாரிமுத்து காரை அப்படியே நிறுத்திவிட்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினார்.

ரோட்டில் கார் தீப்பிடித்து எரிவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் .பொன்னாமலை தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி காரில் எரிந்த தீயை அணைத்தனர்.

விசாரணையில் காரில் இருந்த எரிபொருள் குழாயில் ஏற்பட்ட சேதம் இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூரில் மின்கம்பத்தில் கார் மோதி ஒருவர் பலி…!!
Next post பீர் வைக்கும் பெட்டியில் மோட்டார் பொருத்தி பயணம்: வீடியோ வடிவில்…!!