கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1200 காசிமேடு மீனவர்கள் கதி என்ன?- கடல் சீற்றத்தால் உறவினர்கள் பீதி
வங்ககடலில் உருவான அதிபயங்கர புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடலோர பகுதி மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்தை தேடி சென்றனர். திருவொற்றிïர் அப்பர் நகரில் கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த 12 வீடுகளை அலை அடித்து சென்றது. அங்கு தங்கி இருந்தவர்கள் உயிர் தப்பினர். பொதுமக்கள் யாரையும் கடலுக்குள் செல்ல அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணபட்டதால் விசைபடகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் கரைக்கு திரும்ப தொடங்கினர். நேற்று முன்தினம் மாலை 8 படகுகள் கரையை நெருங்கியது. அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த படகுகள் கரைக்கு வரமுடியவில்லை. அதில் இருந்த 45 மீனவர்கள் கடலிலேயே தவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அவர்களை பாதுகாப்பாக மீட்க வட சென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவிட்டார். அதன்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் சபானந்தம், துறைமுக கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது ஆலோசனை படி 8 படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டது.
அங்கு கடல் அலையின் சீற்றம் சற்று குறைவாக இருந்தது. மேலும் கிரேன் உதவியுடன் 8 படகுகளில் உள்ள மீனவர்களையும் போலீ சார் பத்திரமாக மீட்டனர். அவர்களது படகுகளும் சேதமடையாமல் தப்பித்தது. படகுகளில் உள்ள மீன்கள் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே தீபாவளி முடிந்ததும் சிறப்பு பூஜை நடத்தி 1200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் 200 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுகடலில் ஆந்திர எல்லை பகுதியில் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து வருவது வழக்கம்.
இவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை மீனவர்களின் கதி என்னப என்பது தெரியாமல் உறவினர்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி உள்ளார்கள். அதிதீவிர புயல் காரணமாக நடுகடலில் 3 மீட்டர் உயரத்திற்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் ஏதாவது ஆபத்தில் சிக்கி இருக்குமோப என்ற பயத்தில் உறைந்து போய் உள்ளனர்.
இது பற்றி சென்னை – செங்கை மாவட்ட விசை படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் ரகுபதி கூறியதாவது:-
சென்னை காசிமேடு பகுதியில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு 200 விசைபடகுகளில் 1200 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடுமையான கடல் சீற்றம் காரணமாக ஆந்திரமாநிலம் கிருஷ்ணா பட்டினத்துக்கும் காக்கி நாடாவுக்கும் இடையே அவர்கள் நடுக்கடலில் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும்படி கடலோர காவல் படையினரையும், கடற்படை யினரையும் கேட்டுக் கொண் டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே வட சென்னையின் கடலோர பகுதிகளில் மேற் கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை இணை போலீஸ் கமிஷனர் ரவி பார்வை யிட்டார். மீனவர்கள் மாயமானது குறித்து புகார் வந்தால் அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
அதே போல் சென்னை மெரீனாவில் நிறுத்தப் பட்டிருந்த 20 க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் நள்ளிரவில் சீறிவந்த ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டது. மீன்பிடி விசைபடகுகள் கவிழ்ந்தது. மீன் பிடி வலை களும் அலையில் அடித்துச் செல்லப்பட்டது. சில படகுகள் சேதம் அடைந்தது. அங்கு இரவு முழுவதும் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் மவுரியா தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரீனாவில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
« முன்னைய பக்கம்