விமான நிறுவன அதிகாரிகளை நிர்வாணமாக ஓடவிட்ட விவகாரம்: 5 ஊழியர்கள் அதிரடி கைது…!!

Read Time:2 Minute, 29 Second

airfrance_issue_008வேலை வாய்ப்பினை பறிக்க திட்டமிட்டதால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் விமான நிறுவன அதிகாரிகளை நிர்வாணமாக ஓடவிட்ட சம்பவம் தொடர்பாக 5 ஊழியர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸின் ரோய்ஸி நகரில் அந்நாட்டு அந்நாட்டு Air France விமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பலரின் வேலையை பறிக்க அதிகாரிகள் முடிவு செய்ததை தொடர்ந்து கடந்த 5ம் திகதி அலுவலக வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் பங்கேற்ற ஊழியர்கள் சிலர், ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் HR மேலாளரான Xavier Broseta மற்றும் மூத்த அதிகாரியான Pierre Plissonnier ஆகிய இருவரை குறிவைத்து தாக்கினர். மேலும், அவர்கள் இருவரின் ஆடைகளை கிழித்து ஓட விட்டுள்ளனர்.

அலுவலகத்தில் நடந்த இந்த கலவரம் அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.

இதனை கைப்பற்றி ஆய்வு செய்த பொலிசார், கலவரம் மற்றும் அடிதடியில் ஈடுபட்ட CGT என்ற தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 5 ஊழியர்களை நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

விமான நிறுவன அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற இந்த கலவரத்திற்கு எதிராக பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் உள்ள சுமார் 2,900 பணியிடங்களை நீக்குவதுடன், ஊழியர்களின் பணிநேரத்தையும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டது.

எதிர்வரும் 2 வருடங்களுக்குள் சுமார் 1.8 பில்லியன் யூரோ மதிப்பிலான செலவினங்களை குறைப்பதற்காக ஏர் பிரான்ஸ் நிறுவனம் திட்டமிட்டது ஊழியர்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொள்ளையடிக்க சென்ற வீட்டிற்குள் சிக்கிகொண்ட திருடன்: பொலிசாரை உதவிக்கு அழைத்த வினோத சம்பவம்…!!
Next post எலும்புக்கூடு ஆடையுடன் தோன்றிய ஆசிரியை: ஆச்சரியத்துடன் கவனித்த மாணவர்கள் (வீடியோ இணைப்பு)…!!