நெடுந்தீவுச் சிறுமி கொலை வழக்கு: மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு..!!

Read Time:2 Minute, 30 Second

download (1)நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான மரபணுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்குத் தற்போது கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் அந்த வழக்குத் தொடர்பில் சுருக்க முறையற்ற விசா ரணை இடம்பெற்று வருகிறது.

நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி 2012 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவ தினம் சந்தைக்குச் சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. அதன் பின்னர் வெற் றுக்காணி ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கந்தசாமி ஜெக தீஸ்வரன் (வயது-31) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் பூரண உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சில வருடங்களின் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அவரைப் பிணை எடுக்க எவருமே முன்வரவில்லை. அதனால் அவர் 3 வருடங்களுக்கு மேலாக இன்னும் சிறையிலேயே உள்ளார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர் பரிசோதனைக்காக அவரது ரத்த மாதிரி பெறப்பட்டு மரபணுப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றுடன் சிறுமியினது சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருள்களும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த அறிக்கையே நீதிமன்றுக் குத் தற்போது கிடைத்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த மகள் கைது..!!
Next post இதயத்திற்கு இதம் வேண்டுமா? இதைப்படிங்க…!!