ரெலோ உறுப்பினர்களுக்கு எதிராக, பிரான்ஸில் புலியாதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்?..!! (நடந்தது என்ன?)

Read Time:8 Minute, 5 Second

timthumbரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் மீது பிரான்ஸ்ஸில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா என்ற கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று பிரான்ஸின் லாச்சபலில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டம் இடம்பெற்ற விடுதிக்கு முன்னால், புலம்பெயர்ந்த சில புலியாதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா என்ற கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பிரான்ஸின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனா என்ற கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், குறித்த மாகாண சபை உறுப்பினரை தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்த போதும் அவர் செல்ல மறுத்த நிலையில், விடுதிக்குள் நுழைத்து தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பிரான்ஸ் காவற்துறையினர், கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டு கூட்டத்தை கலைத்ததுடன், டெலோவின் உறுப்பினர்களை பாதுகாப்பாக அழைத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவம் ஒன்று இம்பெற்றிருந்தமையை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதிப்படுத்தினார்.

அதேநேரம் இது குறித்த விளக்கத்தைப் பெறுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா என்ற கோவிந்தன் கருணாகரத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அது கைக்கூடவில்லை.

ரெலோ உறுப்பினர்களுக்கு எதிராக நடத்த முனைந்த இந்த வன்முறையை, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் சகோதரரான, திரு.ஸ்ரீகுகன் அவர்களினால் நடாத்தப்படும் “தமிழ்வின், ஜே.வி.பி, லங்காஸ்ரீ” போன்ற இணையங்கள் இதனை பெரிதாக ஊதிப் பெரிதாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள உண்மை செய்தியில்….

பாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் மீது புலிகள் தாக்குதல் முயற்சி..

பிரான்ஸின் பாரிஸ் நகரில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகினJana-and-selvam1்றது. பாரிஸ் நகரில் தமிழரின் வியாபார ஸ்தலங்கள் நிறைந்து காணப்படும் லாச்சப்பல் என்னுமிடத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஜனா மீது புலிகள் தாக்குதல் முயற்சியிலீடுபட்டுள்ளனர்.

இன்று வெள்ளியன்று மாலை 4 மணியளவில் (23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள) இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் கோடீஸ்வரன்இ மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் போன்றோர் பங்கெடுத்துள்ளனர்.

மேற்படி கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த கோபி தலைமையிலான புலிகளின் கோஷ்டி ஒன்று மண்டப வாசலில் நின்றுகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஜானாவுக்கெதிரானதிரான பழிச்சொற்களுடன் கோசங்களை எழுப்பினர்.

அவ்வேளை வர்த்தக சங்கத்தலைவரான பாஸ்கரன் வெளியே சென்று அவர்களை அமைதியாக உள்ளே வந்து தங்கள் கேள்விகளை எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி உள்ளே வந்த புலிகள் ஜனாவை சூழ்ந்து கொண்டு வன்முறையாக நடந்து கொள்ள முயன்றபோது, கூட்டத்தில் இருந்தவர்களால் மண்டபத்தை விட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டனர்.

மீண்டும் மண்டப வாசலில் நின்டு கொண்டு “ஜனா Teloவில் செயற்பட்ட காலங்களில் புலிகளை கொன்றவன் என்றும், அதற்கு மன்னிப்பே கிடையாது” என்றும் கோஷமிட்டு “ஜனா கூட்டத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்” என்று தாக்குதலுக்கு தயாராக நின்றனர்.

உரிய நேரத்தில் பொலிசார் வருகை தந்தமையினால் ஜனா மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் தாக்குதல்தாரிகளை கலைக்க பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்துமளவுக்கு நிலைமை கட்டுமீறி காணப்பட்டதாக லாச்சப்பல் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த வன்முறையில் ஈடுபட்டோர் புகலிட நாடுகளில் இயங்கும் புலிகளின் பிரிவுகளில் ஒன்றான “தலைமை செயலகம்” சார்ந்தவர்கள் ஆகும என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் கோபி என்பவர் பொட்டம்மானின் புலனாய்வு துறையில் கடந்த காலங்களில் செயல்பட்டவராவார். ஒருசில வருடங்களுக்கு முன் முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சரான வரதராஜபெருமாள் பாரிஸுக்கு வருகை தந்தபோது அவருடன் பயணித்தவர்களை படங்கள் எடுத்து அவரை மிரட்டும்வண்ணம் சண்டித்தனம் பண்ணியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மற்றும் இத்தாக்குதலில் ஈடுபட்ட முரளி என்பவர் புலிகளின் குரல் இணையதளத்தின் இயக்குனராகும்.

புலிகள் மாற்று இயக்கங்களை தடைசெய்து கொலைவெறி கொண்டலைந்த எண்பதுகளில் ஆயிரக்கணக்கான டெலோ உறுப்பினர்களும், அதன் தலைவர் ஸ்ரீ சபாரெட்ணமும் புலிகளால் கொன்று வீசப்பட்ட கொடூரங்களின் பொறுப்பாளிகள், இன்று ஜனா மீது கொலை குற்றச்சாட்டு சொல்லுவது எவ்வகையில் பொருத்தம்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆடைகளை துவைத்து மடித்து தரும் உலகின் முதலாவது ரோபோ (வீடியோ இணைப்பு)…!!
Next post உலகின் அவலட்சணமான பெண்! (VIDEO)…!!