தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார் அமைச்சர் ரோஹித்த!
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான இலங்கை அரசாங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று காலை பாராளுமறத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: உலகம் முழுவதிலும் நிதி திரட்டி எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு ஆயுதம் விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தமையே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டாகும். எனவே வேறு ஒரு பெயரிலோ அல்லது புதிதாகவோ மீண்டும் இயங்க முடியாதபடி இந்த அமைப்புக்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்க திறைசேரி அதிகாரிகளிடம் கோரினேன். எனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவர்கள் செயற்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் 2006 ஆம் ஆண்டின் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஆராய்ந்த பின்னரே பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதலாவது அமெரிக்க நிறுவனமாக அந்த நாட்டின் திறைசேரி விளங்குகின்றது. அமெரிக்காவிலும் கனடாவிலும் 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16 புலிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும் போர்வையிலேயே அவர்கள் நிதி சேகரிப்பு நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.
அதைத் தொடர்ந்து ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது போல் இலங்கையிலும் அந்த அமைப்பின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். அத்துடன் அந்த அமைப்பபையும் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பையும் அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம விமல் வீரவன்சவின் கோரிக்கையில் எவ்வித விவாதத்துக்கும் இடமில்லையென்றும் எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் டீ.ஆர்.ஒ. ஆகிய அமைப்புக்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு வந்து குவியும் நிதிகளைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...