குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்படும் பகைமையை எவ்வாறு கையாள வேண்டும்…!!

Read Time:3 Minute, 26 Second

08-1444303646-2howtohandlesiblingrivalryinkidsதிருமணமாகி, 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினமும் “தகுடுதத்தோம்” கதி தான். அந்த அளவு வீட்டில் தினம் தினம் ஓர் உலகப் போர் மூண்டுவிடும்.

தெருவே அதிரும் அளவு சண்டையிடும் இவர்கள் கூறும் அதற்கான காரணம் எப்போதுமே மிகவும் சில்லியாக தான் இருக்கும்.

என்ன செய்ய முடியும்? குழந்தைகளாக இருந்த போது நாமும் இதையே தான் செய்தோம் என்பதை மறந்துவிட முடியாது. உடன்பிறந்த இவர்களுக்குள் இப்படி சண்டை மற்றும் பகைமை வளர்வதற்கு ஒருசில வகைகளில் பெரியவர்கள் தான் முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்….

டிப்ஸ் #1

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உடன் பிரப்புகளுள் பகைமை வளர முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர் தான். இருவரை மனதினுள் சமமாக காதலித்தாலும், வெளியில் சுட்டியாக இருப்பவர் அல்லது படிப்பில் கெட்டிக்காரராக திகழும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கி சமநிலை இன்றி நடந்துக் கொள்வதை தவிர்த்தாலே இந்த பகைமை குறைந்துவிடும்.

டிப்ஸ் #2

குற்றம் கூறுவது, இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் அனைவரும், அனைத்திலும் சிறந்து விளங்க மாட்டார்கள். எனவே, யாராவது எதையாவது சரியாக செய்யாவிட்டால், மற்ற குழந்தைகள் முன்பு நிறுத்தி குற்றம் கூற வேண்டாம்.

டிப்ஸ் #3

பெரும்பாலும் உடன்பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் பகைமை வளர காரணமே ஒருவரை, மற்றொருவரோடு ஒப்பிட்டு பேசுவதனால் தான். எனவே, எக்காரணம் கொண்டும் ஒப்பிட்டு பேசாதீர்கள்.

டிப்ஸ் #4

உறவினர்கள்.., பெற்றோர்கள் தங்கள் குழந்தையை எந்த பாகுபாடு இன்றி வளர்த்தாலும், இந்த உறவினர்கள் சும்மா இருக்காமல், அவன் நல்ல சுட்டியா இருக்கான், சுறுசுறுப்பா இருக்கான், இதோ இவன் தான் மந்தமா இருக்கான் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், இது அந்த பிஞ்சி மனதில் பகைமை எனும் நஞ்சை வளர்ப்பதற்கு சமம். இவ்வாறு செய்யா வேண்டாம்.

டிப்ஸ் #5

பெரியவர்களோடு ஒப்பிடுவது, நீதான் தாத்தா மாதிரி இருக்க, நீதான் அப்பா மாதிரி இருக்க.. என்று ஒருவரை பெரியவர்களோடு ஒப்பிடுதல். பொதுவாக குழந்தைகள் பெரியவர்களை போல இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள். இதில், ஒருவர் அப்படி இருக்கிறார், தான் அப்படி இல்லையா என்பது அவர்கள் மீது பகைமையை வளர்க்க காரணமாகிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்தரமுல்லையில் சடலம் மீட்பு..!!
Next post ஆடைகளை துவைத்து மடித்து தரும் உலகின் முதலாவது ரோபோ (வீடியோ இணைப்பு)…!!