2 பெண் பொலிசாரை சுட்டுக்கொன்ற மனநோயாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

Read Time:2 Minute, 45 Second

dale_cregan_005பிரித்தானிய நாட்டில் 2 பெண் பொலிசார் உள்பட 4 பேரை கொலை செய்த ’ஒற்றைக்கண்’ மனநோயாளி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்ட்டர் நகரில் டேல் க்ரெகன்(32) என்ற நபர் பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார்.

விபத்து ஒன்றில் இவருக்கு ஏற்கனவே ஒரு கண் பறிபோய் இருந்துள்ளது. தீயப்பழக்கங்களுக்கு அடிமையான அவர் நாளடைவில் மனநோயாளியாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு Fiona Bone(32) மற்றும் Nicola Hughes(23) என்ற இரண்டு பொலிசாரை முகவரி கேட்பதாக அழைத்து சென்று அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

டேல் க்ரெகனை கைது செய்து போலிசார் விசாரணை செய்ததில், அவர் ஏற்கனவே ஒரு தந்தை மற்றும் மகனை கொலை செய்திருந்தது தெரியவந்தது.

மேலும், டேல் ஒரு மனநோயாளி என்பதால் தான் இந்த கொலைகளை செய்ததாக அவரின் உறவினர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது பேசிய நீதிபதி, டேல் ஒரு மனநோயாளி தான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபனம் ஆகியுள்ளது.

அவரை சிறையில் வைத்திருப்பது மேலும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், அவரை வாழ்நாள் முழுவதும் மனநல மருத்துவமனையில் தகுந்த பாதுகாப்புகளுடன் அடைத்து வைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது லிவர்பூலில் உள்ள Ashworth என்ற சிறப்பு மருத்துவமனையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கற்பழிப்பு, குழந்தைகள் மீதான வன்புணர்வு செயல்களில் ஈடுப்பட்டது உள்ளிட்ட பல குற்றங்களால் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 227 மனநோயாளிகள் இதே மருத்துவமனையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்திலிருந்து இறங்கிய பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்…!!
Next post நாயை துரத்தி சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்: குப்பை லொறியில் மோதி பலியான பரிதாபம்…!!