ஜப்பானின் வீதிகளை விரைவில் ஆக்கிரமிக்க தயாராகும் சாரதியற்ற டாக்சிகள் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:1 Minute, 28 Second

robot_taxi_002-615x255கூகுள் நிறுவனம் உட்பட வேறு சில நிறுவனங்களும் சாரதிகள் அற்ற தானியங்கி கார்களை உருவாக்கி அவற்றினை தொடர்ச்சியாக பல்வேறு பரீட்சிப்புக்குள்ளாக்கி வருகின்றன.

இந்நிலையில் அடுத்த வருட ஆரம்பம் முதல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய தானியங்கி டாக்சிக்களை பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக ஜப்பான் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜப்பானிய அரசுடன் Robot Taxi நிறுவனமும் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ள இத்திட்டத்திற்கான பரீட்சிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி பிரதான நகரங்களின் பெருந்தெருக்களில் இருந்து 3 கிலோமீற்றர்கள் வரை பயணம் செய்ய விரும்புபவர்கள் இச்சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிரடியாக குறித்த திட்டத்தினை அறிமுகம் செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைப்பதாகவும் இருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால்….?
Next post 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…!!