காரணமின்றி நடந்த தொடர் கொலைகள்: அடையாளம் தெரியாத ”Zodiac killer” (வீடியோ இணைப்பு)…!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1960களில் வாழ்ந்த அடையாளம் தெரியாத தொடர் கொலைக்காரன் ஒருவன் பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளான்.
வடக்கு கலிபோர்னியாவில், தொடர் கொல்லையில் ஈடுபட்ட அந்த மர்ம ஆசாமி, தன்னை ”Zodiac killer” (ராசிகளின் அடிப்படையில் கொலை செய்பவன்) என்று குறிப்பிட்டுள்ளான்.
1968 முதல் 1969-க்குள் 5 தொடர் கொலைகளை செய்த அவன், அதற்கும் மேற்பட்ட பல கொலைகளை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இன்று வரை அந்த மர்ம நபர் யார் என்று பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1968ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி, 17 வயது டேவிட் என்ற சிறுவனையும் அவனது 16 வயது காதலி பெட்டியையும் கலிபோர்னியாவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளான்.
அந்த கொலையை யார் செய்தது? கொலைக்கான காரணம் என்னவென்று அறியாமல் துப்பு கிடைக்காமல் பொலிசார் திக்குமுக்காடி போயுள்ளனர்.
பின்னர் 1969ம் ஆண்டு யூலை மாதம் 5ம் திகதி, டார்லின் என்ற 22 வயது பெண், தனது 19 வயது காதலன் மைக்குடன் Vallejo என்ற இடத்தில் அமர்ந்திருந்த போது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில், டார்லின் பரிதாபமாக உயிரிழந்தார். மைக் பலத்த காயம்டைந்துள்ளார்.
இந்த கொலையை செய்த அந்த மர்ம நபர், பொலிசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை நடந்த இடத்தை கூறியதோடு, 1968ம் ஆண்டு நடந்த கொலைகளையும் தானே செய்ததாக பொலிசில் அறிவித்துள்ளார்.
அந்த மர்ம நபர் பொலிசில் இவற்றை தெரிவித்த பிறகே, பொலிசாரால் இந்த வழக்கில் சிறிதளவேனும் அடுத்த கட்டத்தை அடைய முடிந்துள்ளது.
மேலும், பலத்த காயமடைந்த மைக் கூறியதை வைத்தே கொலையாளியின் உருவத்தின் மாதிரியை பொலிசார் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், 1969ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் திகதியன்று, அந்த மர்ம நபர் 3 நாளிதழ்களுக்கு தன் கைப்பட எழுதிய கடிதமொன்றை அனுப்பியுள்ளான்.
அதில், நான் தான் கடந்த டிசம்பர் மாதம் இரண்டு சிறுவர்களையும் கொலை செய்தேன் என்று குறிப்பிட்ட அவன், இந்த கடிதத்தை உங்களது நாளிதழின் முதல் பக்கத்தில் பிரசுரிக்காவிட்டால் மேலும் பல கொலைகள் நடக்கும் என்று எச்சரித்துள்ளான்.
மேலும் அந்த கடிதத்தில் சந்தேக எழுத்துக்களை பயன்படுத்தியிருந்த அவன், தன்னை பற்றிய அடையாளத்தையும், புரியாத சந்தேக வார்த்தைகளால் குறிபிட்டுள்ளான்.
இதையடுத்து அவனை கண்டுபிடிப்பதற்காக பொலிசார் அதி தீவிரமாக இறங்கிய நிலையில், மற்றொரு கடிதம் நாளிதழுக்கு வந்துள்ளது.
அதில், நான் தான் zodiac பேசுகிறேன். நான் என்னை பற்றிய விவரங்களை சந்தேக வார்த்தைகளாக வழங்கியும் பொலிசாரால் என்னை கண்டுபிடிக்கவில்லையே என்று தெரிவித்துள்ளான்.
இதையடுத்து Donald Harden என்ற பள்ளி ஆசிரியரும் அவரது மனைவி Bettye, இருவரும் இணைந்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டதை அறிய முயன்றனர்.
அப்போது, அந்த கொலையாளியின் சந்தேக வார்த்தைகளால் நிறைந்த முதல் வரி, எனக்கு மக்களை கொல்வது மிகவும் பிடித்துள்ளது. ஏனெனில் அதில் எனக்கு எல்லையற்ற ஆனந்தம் கிடைக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது.
எண்ணற்ற தகவல்களும், மைக் கூறிய அடையாளங்களையும், அவன் அனுப்பிய கடிதத்தையும் கொண்டு கூட அந்த மர்ம நபரை பொலிசாரால் அடையாளம் கண்டு நெருங்க முடியவில்லை.
இந்நிலையில், அவன் மீண்டும் ஒரு கொலையை செய்து மக்களை அச்சுறுத்துகிறான். 1969ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ம் திகதி, தனியாக இருந்த இளம் ஜோடியை ஒன்றாக கட்டி வைத்து அவர்களது உடையில் தன்னை பற்றிய அடையாளத்தை வரைந்துள்ளான்.
அதன் பின், அவர்களை கடுமையாக கத்தியால் குத்தி காயப்படுத்திய அவன், அவர்களது, கார் கதவில் பொலிசாருக்கு தகவல் ஒன்றை கிறுக்கி வைத்துள்ளான்.
பின்னர் பொலிசாருக்கு தகவல் அளித்த அவன் தான் அவர்களை கொடூரமாக தாக்கியதையும் தெரிவித்துள்ளான்.
சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்த போது இருவரும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளனர்.
ஆனால் அவசர உதவி செய்வதற்குள் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்த கொலைகளும் கடிதங்களும் 1974ம் ஆண்டு நின்றுள்ளது.
அதையடுத்து அது போன்ற கொடூர கொலைகள் எதுவும் நடக்கவில்லை. கடிதங்களும் வரவில்லை.
இந்த கொலைகள் நடந்து 50 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையிலும் பொலிசாரால் அந்த கொலையாளியை யார் என்று கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை.
அந்த மர்ம நபர் பற்றி பல ஊகங்கள் கூறப்பட்டாலும் ஆதாரத்துடன் அவன் யார் என்று பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவே இல்லை.
மேலும், இந்த மர்மநபரின் கொலைகளை மையமாக வைத்து உலகளவில் பல நாவல்களும், திரைப்படங்களும் வந்துள்ளது.
Average Rating