வைரக் கற்கள் பறிமுதல்

Read Time:3 Minute, 14 Second

money00005.gifபாங்காக்கில் இருந்து கடத்தி வரப் பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. இதையொட்டி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த ஒருவர் கிரீன் சிக்னல் வழியாக வெளியேறினார். அவர் கொண்டு வந்த உடை மைகளை ஸ்கேன் செய்து பார்த்தபோது சந்தேகத்திற்குரிய எதுவும் தென் படாததால் அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழ வில்லை. சோதனை முடிந்து சென்ற அந்த நபரை வருவாய் புலனாய்வு அதிகாரி கள் பாய்ந்து சென்று மடக்கி, அவரது உடைமைகளை மீண்டும் சோதனை யிட்டனர். அந்த நபர் வைத்திருந்த கைப்பை யில் வைரக்கற்கள் கார்பன் பேப்பரில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். கருப்பு நிற கார்பன் பேப்பரில் அவை சுற்றி வைக்கப்பட்டிருந்ததால் ஸ்கேன் செய்தபோது மானிட்டரில் தெரிய வில்லை. கைப்பற்றப்பட்ட வைரக் கற்களின் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.

இதையொட்டி அந்த நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய் தனர். அவருடைய பெயர் ஜாகீர்அலிகான் (வயது 48). கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் அலிப்பூரைச் சேர்ந்தவர். அவரிடம் இந்த வைரக் கற்களை கொடுத்து அனுப்பியவர் யார்?

இந்தக் கடத்தல் தொழிலை ஜாகீர் அலிகான் வழக்கமாக கொண்டிருக்கிறாரா? அல்லது முதல் முறையாக கடத்தி வந்து மாட்டிக் கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜாகீர் அலிகானை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சாஸ்திரி பவனுக்கு கொண்டு சென்றனர்.

இதேபோன்று கடந்த மாதம் 31ம் தேதி சென்னைக்கு வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்களை கடத்தி வந்து ஜெய்ப்பூரைச் சேர்ந்த நந்தகோபால் (வயது 38) என்பவர் சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

இந்த சம்பவம் நடந்த 2 வார காலத் திற்குள் மீண்டும் ஒருவர் வைரக் கற்களைக் கடத்தி வந்து சிக்கியுள்ளார். இந்த இருவரிடமும் வைரக் கற்களை கொடுத்து அனுப்பியவர் ஒரே ஆசாமி தானா? என்பது தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நவாசுடன் பேசத் தயார்: புட்டோ
Next post கள்ளநோட்டு தொழிற்சாலை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.