இலங்கை – இந்திய கூட்டு இராணுவ பயிற்சி: 3வது முகாம்!!

Read Time:1 Minute, 41 Second

2004964713Untitled-1இந்தியா-இலங்கைக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயிற்சி யுக்திகளை பரிமாறிக் கொள்ளும் வகையிலும் இரு நாடுகளும் பங்கேற்கும் கூட்டு இராணுவ பயிற்சி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ளது.

புனேயில் உள்ள ஆந்த் இராணுவ முகாமில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

‘பயிற்சி மித்ர சக்தி-2015’ என்று பெயரிடப்பட்ட இந்த கூட்டு பயிற்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான 3-வது முகாம் ஆகும். இந்த பயிற்சி மூலம் இரு நாட்டு இராணுவத்தின் திறமை பெருகும், புரிதல் தன்மையும், மரியாதையும் அதிகரிக்கும் என்று இந்திய இராணுவத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.சபை வழிகாட்டுதலின்படி தீவிரவாத ஒழிப்பு கூட்டு நடவடிக்கையாக நடைபெறும் இந்த பயிற்சி அடிப்படை உறுதி மற்றும் தன்னம்பிக்கை பெருகவும், எல்லையில் அமைதி, முன்னேற்றம், நிலைத்தன்மை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2016க்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!!
Next post மின்தடை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!!