மாதவரத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 9 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி: வெளிநாட்டுக்கு தப்ப முயன்றவர் கைது!!

Read Time:1 Minute, 30 Second

965f1ef0-f675-4d0f-babc-10f1a60907e6_S_secvpfசிதம்பரத்தை சேர்ந்தவர் சிவசண்முகம். இவர் மணலி பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் மாதவரம் வி.எஸ். நகரைச் சேர்ந்த மருதை (36). என்பவரிடம் அறிமுகமானார். மருதை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

மருதை மற்றும் அவரது நண்பர்கள் 8 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக சிவசண்முகம் ரூ.12 லட்சம் வரை வசூல் செய்தார். ஆனால் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதுகுறித்து மருதை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சிவசண்முகம் வேலையை ராஜினாமா செய்து வெளிநாடு தப்பி செல்ல இருப்பதாக மருதைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விமான நிலையத்தில் சிவசண்முகத்தை கைது செய்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சிவசண்முகம் நண்பர் முருகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடித்துக் கொல்லப்பட்ட 2 கொள்ளையர்கள் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!
Next post வேலை செய்யும் இடத்தில் ரூ.5.80 லட்சம் கைவரிசை: 3 பேர் கைது!!