விருதுநகர் அருகே 8 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பட்டாசு தொழிலாளி கைது!!

Read Time:1 Minute, 47 Second

52435b1a-7580-4d70-bc68-e9c4b4faec81_S_secvpfவிருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது43). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுமியிடம் தங்கவேலு மிட்டாய் தருவதாக கூறி அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். வீட்டுக்கு வந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு பெற்றோர் இது பற்றி விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி நடந்ததை தெரிவித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கடந்த ஒரு வருடமாக அந்த பகுதியில் உள்ள 3 வயது முதல் 12 வயது உள்ள 8 சிறுமிகளிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று தங்கவேலு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுநலவாய அமைப்பின் வௌிவிவகார அமைச்சர்கள் கூட்டம் மங்கள தலைமையில்!!
Next post அடித்துக் கொல்லப்பட்ட 2 கொள்ளையர்கள் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!