கவர்ச்சியாக வந்த செல்சியை பற்றி `கமென்ட்’ ஜிம்பாப்வே இளைஞருடன் ஹாரி மோதல்

Read Time:3 Minute, 46 Second

முழு நேர குடிகாரராக மாறிவிட்ட, பிரிட்டன் இளவரசர் ஹாரி, இரவு விடுதியில் மது போதையில், ஒருவரை கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ராணுவத்தில் கட்டாயம் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டும். இதில் அரச குடும்பத்துக்கு மட்டும் விதிவிலக்கு. ஆனால், மற்றவர்களைப் போலவே, 23 வயது ஹாரியும் ராணுவத்தில் சேர்ந்தார். இவர் இடம் பெற்றிருந்த குழுவினர், ஈராக்கில் பாதுகாப்புப் பணிக்கு புறப்பட்டனர். ஹாரியும் அவர்களுடன் புறப்பட்டார். ஆனால், ஹாரியின் உயிருக்கு அச்சுறுத்தல் குறித்து எடுத்துச் சொல்லி, அவரை சமாதானப்படுத்தி, ஈராக் அனுப்ப ராணுவ உயர் அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் கடும் விரக்தியில் உள்ளார் ஹாரி. அவருக்கு ஆறுதலாக இருப்பது, அவரது தோழி செல்சி தான். செல்சி மற்றும் நெருக்கமான நண்பர்களுடன் இரவு விடுதிக்குச் சென்றார். கருப்பு நிறத்தில் மார்புப் பகுதியில் மிக தாழ்வாகவும், குட்டை பாவாடையுடனும் மிகக் கவர்ச்சியாக வந்திருந்தார் செல்சி. மது குடித்து போதை ஏறிய நிலையில், கழிவறைக்குச் சென்றார் ஹாரி. அவர் திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாமல் வேறு டேபிளுக்குச் சென்றார். அப்போது, அவரது மெய்க்காவலர்கள், அவரை சரியான டேபிளுக்கு அழைத்து வந்தனர்.

அந்த நேரத்தில் ஒரு டேபிளில் இருந்த 22 வயது ஜிம்பாப்வே நாட்டு இளைஞர் ஒருவர், செல்சியை பார்த்து ஆபாசமாக `கமென்ட்’ அடித்தார். இதனால், வெகுண்ட ஹாரி, `யார் அவன்? உன்னை கொல்லப் போகிறேன். எங்கே அவன்? அவனை கொல்லாமல் விடமாட்டேன்’ என்று ஆக்ரோஷமாக கத்தினார். கோபத்தின் உச்சத்திலும் போதை மயக்கத்திலும் இருந்த ஹாரியை சமாதானப்படுத்தி அவரது டேபிளில் உட்கார வைக்க, மெய்க்காவலர்கள் போராட வேண்டியதாகி விட்டது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், `ஹாரியின் கும்பல் பெரிதும் போதை மயக்கத்தில் இருந்தது. ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவுவதும், சில்மிஷம் செய்வதுமாக இருந்தனர். டேபிளில் ஏறி, நடனமாடத் துவங்கிவிட்டார் ஹாரி. ஒரு கட்டத்தில் செல்சியின் தலைமுடியில் சூடியிருந்த கிரீடம் போன்ற நகையை பிடித்தவாறு, செல்சியின் காதருகே ஏதோ ரகசியாக கூறிக்கொண்டு இருந்தார். அவர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர்’ என்று கூறினர்.இந்த தகவல்கள் தெரியவந்ததும், துப்பறியும் நிபுணர்கள் சிலர் வந்து, ஹாரியையும் செல்சியையும் அதிகாலை 3.30 மணிக்கு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ டிரைவர் கைது
Next post காபி போட்டபோது ஸ்டவ் வெடித்து தம்பதி கவலைக்கிடம்