குமாரபாளையம் அருகே பேரன்–பேத்திக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பாட்டி!!

Read Time:2 Minute, 45 Second

018a80f3-22c3-4d62-90fd-d53a35595af6_S_secvpfநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி சவுண்டம்மாள். விசை தறி தொழிலாளர்கள்.

இவர்களது மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகனும், மருமகளும் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். அவர்களுக்கு ஆகாஷ்வரன் (வயது 8), என்ற மகனும் அஷிதா (6) என்ற மகளும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சுந்தர்ராஜனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் கடன் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. இதனால் வீட்டில் ரூ.90 ஆயிரன் கடன் ஏற்பட்டுள்ளது.

இந்த பணம் அதேபகுதியில் வசித்து வரும் விசை தறி உரிமையாளர் வாசு என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளனர்.

அவரிடம் இருந்து கடன் வாங்கியுள்ளதால் சுந்தர்ராஜன், வாசு என்பவருடைய விசை தறியில் வேலை செய்து வந்தார். கடனை அடைப்பதற்காக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் வேலைக்கு செல்லவில்லை.

இதனால் வாசு என்பவர் சுந்தர்ராஜன் வீட்டிற்கு வந்து, தன்னுடைய விசை தறியில் வேலை பார்க்குமாறும், இல்லையென்றால் வாங்கிய கடன் ரூ.90 ஆயிரத்தையும் திரும்ப தருமாறும் கூறி சத்தம் போட்டுள்ளார்.

இப்படி கடன் சுமையால் மனவேதனை அடைந்த சவுண்டமாள் தனது பேரன் மற்றும் பேத்திக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷத்தை குடித்தார். இதில் பேத்தி அஷிதா பரிதாபமாக இறந்தார். பாட்டி சவுண்டமாள் வாயில் துரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்து கிடந்தார். பேரன் ஆகாஷ்வரன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொட்டு சுரேஷ் கொலையில் முழு பின்னணியை சொல்ல மறுப்பு: அட்டாக் பாண்டியிடம் தீவிர விசாரணை!!
Next post பேச்சிப்பாறையில் நர்சிங் மாணவியுடன் வாலிபர் உல்லாசம்: திருமணத்துக்கு மறுத்ததால் போலீசில் புகார்!!