ஐ.நா அறிக்கையை முற்றிலும் ஏற்கவோ நிராகரிக்கவோ தேவையில்லை!!

Read Time:2 Minute, 8 Second

1575883585Untitled-1மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வௌியான பின்னரே கூட்டு அரசாங்கத்தின் பெறுமதி தெரிந்துள்ளதாக, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணிலின் அரசாங்கம் வந்தால் மேற்குலக எதிர்ப்பு நாடுகளின் உதவி தமக்கு கிடைக்காது எனவும், தமது தனி ஆட்சி வந்தால் மேற்குலக நாடுகளின் உதவி கிடைக்காது எனவும் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டு அரசாங்கத்தில் இரு தரப்பினரதும் ஒத்துழைப்பையும் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை பெயர்களுடன் வௌியாக இருந்ததாக குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிஷ்டவசமாக தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் அவ்வாறு நிகழவில்லை எனவும் அவர் கூறினார்.

அமெரிக்கா போன்ற சக்கி மிக்க நாட்டின் ஒத்துழைப்பு இருப்பதால் குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இங்கு மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர் திஸாநாயக்க, அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிக்கவே ஏற்றுக் கொள்ளவே வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!!
Next post சமையல் எண்ணைக்கான வரி அதிகரிப்பு!!