மருந்து போல் குணப்­ப­டுத்தும் உரு­ளைக்­கி­ழங்கு..!!

Read Time:4 Minute, 19 Second

timthumb (8)சாப்­பிட்­டதும் உட­ன­டி­யாக உட­லுக்குச் சக்தி தரக்­கூ­டிய முக்­கி­ய­மான கிழங்கு உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும்.

அதே நேரத்தில் எளிதில் ஜீர­ணிக்­கக்­கூ­டிய தன்­மை­யையும் உரு­ளைக்­கி­ழங்கு பெற்­றுள்­ளது. மேலும் பல்­வேறு வழி­களில் சமைத்து உண்­ணத்­தக்க வகையில் அமைந்­துள்­ளது. இந்தக் கிழங்கு மட்­டுமே.

இதை அவித்தோ, சுட்டோ, வேக­வைத்தோ, வறுத்தோ பயன்­ப­டுத்­தி­னாலும் கிழங்கின் மருத்­துவக் குணமும் மாறாமல் இருப்­பது இக்­ கிழங்கின் சிறப்­பம்­ச­மாகும். 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்­பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்­புக்கள் 0.61% ம், நார்ச்­சத்து 0.41% ம் மீதி கார்­போ­ஹை­டி­ரேட்டும் ஆகும்.

இவை தவிர விற்றமின் சி 17 மில்­லி­கி­ராமும், கல்­சியம் 10 மில்லி கிராமும், பாஸ்­பரஸ் 40 மில்­லி­கி­ராமும், விற்றமின் ‘ஏ’யும் விற்றமின் ‘பி’ முதலி­ய­ன­வையும் உள்­ளன.

சோடா, உப்பு, பொற்றா­சியம் முத­லி­ய­னவும் அதிக அளவில் உள்­ளன. ஒரு மனிதன் தினமும் பாலும் உரு­ளைக்­கி­ழங்கும் மட்டும் சாப்­பிட்டால் போதும். அவன் உட­லுக்குத் தேவை­யான அனைத்தும் கிடைத்­து­விடும். அந்த அள­வுக்கு கார்­போ­ஹை­டி­ரேட்­டுகள் மாப்­பொ­ருளும் சர்க்­க­ரையும் உரு­ளைக்­கி­ழங்கில் அப­ரி­தமாய் உள்­ளன. வேக­வைத்தோ, பொரித்து வறு­வ­லா­கவோ, நீண்ட நாட்­க­ளுக்கு வைத்­தி­ருந்தோ சாப்­பிடப் பயன்­படும் காய்­கறி இதுதான்.

அரிசி, கோது­மைக்கு அடுத்து அதிகம் சாப்­பி­டப்­ப­டு­வது உரு­ளைக்­கி­ழங்கு. உருளைக் கிழங்கை சாப்­பிட்­டதும், அதில் உள்ள ஓர் இர­சா­யனப் பொருள் உட­ன­டி­யாக உட­லுக்குச் சக்­தியைத் தரு­கி­றது.

தர­வ­ரி­சைப்­படி ஒழுங்­கு­ப­டுத்­தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகி­ய­வற்­றிற்கும் முதலில் இருப்­பது உரு­ளைக்­கி­ழங்­குதான்.

சாதா­ரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2 கிராம் அள­வு­கூட புர­தச்­சத்து கிடைக்­கி­றது. பாலை­விடப் புர­தச்­சத்து இதில் அதி­கமாய் இருக்­கி­றது.

பாலுக்குப் பதி­லாக உரு­ளைக்­கி­ழங்கு மசி­யலைக் குழந்­தை­க­ளுக்குக் கொடுத்தால், அது இரவில் பசி­யினால் அழாது நிம்­ம­தி­யாகத் நித்திரை கொள்ளும் அரிசி, கோதுமை, சவ்­வ­ரிசி முத­லி­ய­வற்றை நாம் சமைத்துச் சாப்­பிடும் போது அவற்றில் உள்ள பல்­வேறு ஊட்­டச்­சத்­துகள் அழிந்த நிலை­யில்தான் கிடைக்­கின்­றன.

உரு­ளைக்­கி­ழங்கு மாவுப்­பொருள். இதில் உள்ள எந்தச் சத்தும் அழி­யாமல் கிடைக்­கி­றது. கைக்­குத்தல் அரி­சிக்கு இணை­யான சக்தி தோலுடன் சாப்­பி­டப்­படும் உரு­ளைக்­கி­ழங்கில் கிடைக்­கி­றது. உரு­ளைக்­கி­ழங்கில் தோலுக்கு அருகில்தான் அதிக அளவு ஊட்டச்சத்தும், புரதச்சத்தும், தாது உப்புகளும் உள்ளன.

எனவே, தோலுடன் வேக வைத்து சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நா அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமானது – வடக்கு முதல்வர்!!
Next post உத்தரப்பிரதேசத்தில் மது குடிக்க பணம் தராத 17 வயது மகனை கத்தரிக்கோலால் குத்திய தந்தை!!