மயக்க ஸ்பிரே அடித்து, தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி, கற்பழித்த கும்பல் தலைமறைவு!!

Read Time:1 Minute, 24 Second

6fa4f374-cd14-4d75-8312-acfa3f0f66a9_S_secvpfபஞ்சாப் மாநிலம், பட்டாலா மாவட்டத்திலுள்ள ஜவுரா சிங்கா கிராமத்தை சேர்ந்த பதினைந்து வயது சிறுமியை மயக்க ஸ்பிரே அடித்து கடத்திச் சென்று, கற்பழித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 17-ம் தேதி நள்ளிரவு பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த அந்த 15 வயது சிறுமியின் வீட்டில் நுழைந்த மூன்று பேர், ரசாயானம் கலந்த மயக்க ஸ்பிரேயை அவர்கள் முகத்தில் தெளித்ததில் இருவரும் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து, தரம் சிங் என்பவரின் வீட்டிற்கு அந்த சிறுமியைத் தூக்கிச் சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் அவளை கற்பழித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மூவரையும் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6 மாதத்தில் 85 குழந்தை பெற்ற பெண் – அசாமில் வினோத மோசடி!!
Next post ஆந்திராவில் ஆஸ்பத்திரிகளில் எலி, பாம்புகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா!!