கண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள். (அதிரடி இணையத்தில் வெளிவந்த ஆக்கம் இது)

Read Time:14 Minute, 37 Second

karuna-pillaiyan.jpganiflower-star.gifaniflower-star.gifகடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சதியில் சிக்கியிருந்த ராசிக், மோகன், வரதன் போன்றோரின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவராக பிள்ளையான் என்பவர் மாறி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. சகல தமிழ் அமைப்புகளில் இருந்தும் சதா சில உறுப்பினர்கள் சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சதிவலையில் சிக்கியிருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களின் மனமாற்றங்களுக்கான பின்னணி புலிகளியக்கத்தின் மீதுள்ள அளவற்ற வெறுப்பும் அவ்வியக்கத்திற்தெதிராக தீவிரமாக போராட வேண்டும் எனும் மனத் தூண்டுதலுமாகவே இருந்துள்ளது. அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து செயல்;பட்டிருந்த போதிலும்; தாங்கள் சார்ந்த அமைப்புகளுக்கு எவ்வித சேதமும் எற்படாதவாறும் அதன் தலைமைக்கு பங்கம் ஏற்படாதவாறும் தம்மை நிர்வகித்துக் கொள்ளப் பழகியிருந்தனர். ஆனால் இன்று கிழக்கில் இதே தேவைக்காக சிறிலங்கா இராணுவத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளையான் என்பவர் தனது முழுத்திறனையும் சிறிலங்கா அரசின் தேவைக்கேற்றவாறு பிரயோகிப்பது மிகவும் வேதனையளிப்பதுடன் பிளைளையானால் கிழக்கில் உருவாக்கப் பட்டிருக்கும்; நிலைமை மிகவும் அபாயகரமானதாகவே தென்படுகின்றது.

karuna-pillaiyan.jpganiflower-star.gifaniflower-star.gifகண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள்….

விடுதலையின் பெயரால் கிழக்கு மக்கள் சுமந்த சோகங்களும் செய்த தியாகங்களும் விழலுக்கிறைத்த நீராகவே சென்று கொண்டிருக்கின்றது. எம்மக்களின் உழைப்புகளும் தியாகங்களும் சிங்கள அரசின் சதிவலையில் சிக்கும் சுயநலப் பேர்வழிகளின் நயவஞ்சகங்களினால் ஏலத்தில் விடப்பட்டு வருகின்றது.

சிங்கள பேரினவாதத்தின் இழிசெயல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவதற்காக தங்களுக்கென்ற ஓர் தரமான அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் காலம் காலமாக தமிழீழ விடுதலை போராட்ட அமைப்புகளை வளர்த்தெடுப்பதில் கிழக்கு மக்கள் காட்டிய ஆர்வங்களும் அவற்றை முறியடிப்பதற்காக சிங்கள பேரினவாதம் வகுக்கும் வியூகங்களும் ஏராளம்.

அந்த வகையில் கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவற்றை சின்னாபின்னமாக்குவதுடன் உண்மையான கொள்கைவாதிகளை இனம் கண்டு அவர்களை தீர்த்து கட்டும் பொருட்டு கட்சிகளிடையே உள்மோதல்களையும் கருத்து முரண்பாடுகளையும் உண்டு பண்ணி உள்வீட்டு படுகொலைகளை மேம்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி கண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சதியில் சிக்கியிருந்த ராசிக், மோகன், வரதன் போன்றோரின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவராக பிள்ளையான் போன்றோர் மாறி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. சகல தமிழ் அமைப்புகளில் இருந்தும் சதா சில உறுப்பினர்கள் சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சதிவலையில் சிக்கியிருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களின் மனமாற்றங்களுக்கான பின்னணி புலிகளியக்கத்தின் மீதுள்ள அளவற்ற வெறுப்பும் அவ்வியக்கத்திற்தெதிராக தீவிரமாக போராட வேண்டும் எனும் மனத் தூண்டுதலுமாகவே இருந்துள்ளது. அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து செயல்;பட்டிருந்த போதிலும்; தாங்கள் சார்ந்த அமைப்புகளுக்கு எவ்வித சேதமும் எற்படாதவாறும் அதன் தலைமைக்கு பங்கம் ஏற்படாதவாறும் தம்மை நிர்வகித்துக் கொள்ளப் பழகியிருந்தனர்.

ஆனால் இன்று கிழக்கில் இதே தேவைக்காக சிறிலங்கா இராணுவத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளையான் போன்றோர் தமது முழுத்திறனையும் சிறிலங்கா அரசின் தேவைக்கேற்றவாறு பிரயோகிப்பது மிகவும் வேதனையளிப்பதுடன் பிளை;ளையான் போன்றோரால் கிழக்கில் உருவாக்கப்பட்டிருக்கும்; நிலைமை மிகவும் அபாயகரமானதாகவே தென்படுகின்றது.

கருணாஅம்மான் எம்மக்களின் விடுதலைக்காக இரு தசாப்த காலங்களுக்கு மேலாக தனது முழுநேரத்தையும் அர்பணிப்புடன் செலவு செய்து செயல்பட்டு வந்திருந்தார். இத்தருணத்தில் பிரபாகரனது நயவஞ்சகங்கள் கருணாவிற்கு இரு தெரிவுகளை கொடுத்திருந்தது. அவையாதெனின் பிரபாகரனின் வேண்டுதலுக்கிணங்கி துரோகி எனும் பெயர் சுமந்து மரணிக்க வேண்டும் அல்லது அவ்வமைப்பில் இருந்து வெளியேறி தனது போராட்டத்தை தனியாக முன்னெடுக்க வேண்டும். இந்நிலையில் ஆயதப் போராட்டம் என்பது சாத்தியப்படாதது என்பதை உணர்ந்த கருணா விடுதலைப்புலிகளில் இருந்து வெளியேறி தனது முதன்நிலைத் தளபதி பிள்ளையானூடாக ஓர் சிறந்த அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிப்பதனூடாக எம்மக்களின் தேவைகளை வென்றெடுக்க முடியும் என முடிவு செய்து அதற்கான செயல் வடிவம் கொடுத்து முனைபு;புடன் செயல்பட்டு வந்தார்.

கிழக்கில் இருந்து புலிகள் விரட்டியடிக்கப் பட்டிருக்கின்ற நிலையில் அங்கு உருவாகியிருக்க கூடிய தமிழ் மக்களின் அரசியல் தளம் எம்மக்கள் அங்கு நிம்மதியாக வாழக்கூடிய ஓர் நிலைமை உருவாகுவதற்கான அனுகூலங்களுடன் கூடியதாக காணப்பட்டதுடன் அங்கு உருவாக ஏற்பாடாகியிருந்த தமிழ் மக்களின் அரசியல் தளமானது கிழக்கில் தமிழ் மக்களின் ஓருமித்த பலமாக உருவாக கூடியதற்கான சாத்தியக் கூறுகளுடனே தோற்றுவிக்கப் பட்டதையும் உணர முடிந்தது. இதில் சிறப்பம்சம் யாதெனின் கட்சியின் கட்டமைப்பில் பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்த கூடிய ஆயதக்குழுக்களை சார்ந்திராதோரும், கல்விமான்களும், பொது நோக்குடையோரும் உள்வாங்கப்பட்டு இருந்ததுவேயாகும்.

எது எவ்வாறாயினும் கேர்ணல் கருணா என அழைக்கப்படும் முரளிதரன் தெற்காசியாவில் ஒரு பிரபல்யமானவராகவே காணப்படுகின்றார். இப்பிரபல்யத்தினூடாக இவர் ஸ்;தாபிக்கும் அல்லது நுழையும் கட்சி எட்ட வேண்டிய இலக்கை அடையும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. இந்நிலைமை தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் சம்பந்தமான ஓர் அதீத நம்பிக்கையை உருவாக்கியிருந்தமையை உணர்ந்த சிங்கள அரசு அதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற தனது அரசியல் நயவஞ்சக நடவடிக்கையை சிறிலங்கா படைத்தரப்பினரிடம் கையளித்தனர்.

இங்கு அவர் ஓர் சிங்கள அரசியல் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தால் அவருடைய அரசியல் பிரவேசம் பிரகாசமானதாக மாறியிருக்கும் மாறாக அவர் தமிழ் மக்களின் அரசியல் நலனில் அக்கறை செலுத்த முனைந்ததே அவரின் அரசியல் பிரவேசத்திற்கு சாவு மணியடிக்கத் தூண்டியுள்ளது.

அரசின் கட்டளையை ஏற்ற படையினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை தடுப்பதிலும் அக்கட்சியை சிதைப்பதிலும் முனைப்புடன் செயல்ப்பட்டு வருகின்றனர். இதற்காக அவ்வமைப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற கூடியவர் என அதன் தலைமையாலும் மக்களாலும் எதிர்பார்க்கப்பட்டவரான பிள்ளையான் போன்றோரை தேர்ந்தெடுத்த படையினர் அக்கட்சியை முற்றிலும் அழிக்கும் செயலை பிள்ளையானூடாக அரங்கேற்றி வருகின்றனர்.

tmvpkaruna-pillaiyan-iniyaparathinew1.jpgசிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையினராலும் விசேட அதிரடிப் படையினராலும் கடற்படையினராலும் இலங்கையரசின் தீவிர விசுவாசியான கே.ரி.ராஐசிங்கத்தினாலும் மற்றும் முஸ்லிம் பேரினவாதியான அமீர்அலியினாலும் நிர்வகிக்கப்படும் பிள்ளையான் போன்றோர் சிறிலங்கா அரசினதும் அதன் இராணுவத்தினதும் வரலாற்று துரோகங்களை நன்கறிந்திருந்தும் அவர்களின் முதலமைச்சர் எனும் எலும்புத்துண்டு மாயைக்குள் சிக்குண்டது வியப்புக்குரியதே.

கிழக்கின் முதலமைச்சராக ஓரு தமிழனை நியமிக்க கூடிய நேர்மையான ஓர் சிங்கள கட்சி இலங்கையிலிருக்குமாயின் அது நிச்சயமாக தமிழர்ன் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கையில் தமிழ் மக்களை நிம்மதியாக வாழ அனுமதித்திருக்கும் என்பதை உணர மறுக்கும் பிள்ளையான் இவர்களின் மாயைவலையில் சிக்குண்டு எம் மக்களின் விடுதலையின் பால் கொண்டிருந்த பற்றுதியை ஓர் சொர்ப்பகாலத்தில் உதறித் தள்ளிவிட்டு நயவஞ்சகர்களின் தேவைக்கேற்றவாறு செயல்பட்டு வருவதை காண முடிகிறது.

tmvpthilipan2.jpgகுறிப்பாக எம் பிரதேசத்து அரசியலில் செல்வாக்கு செலுத்தக் கூடிய குடும்பப் பின்னணியை கொண்டிருந்த செல்வி பத்மினி அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு தடைவிதித்ததோடு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை நாட்டை விட்டே வெளியேற வைத்ததுடன் 1987 தொட்டு எம்மக்களின் போராட்டத்தில் பங்கெடுத்து சிறப்பாக செயற்பட்டு வந்த போராளியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் அவர்களை படுகொலை செய்தமை போன்றவை சிங்கள இனவெறிக்கு தீனி போடுவதாக அமையுமேயன்றி தான் எதிர்பார்த்து நிற்கும் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த போதில்லை.

இங்கு தமிழ் மக்களுக்கென உருவாகக் கூடிய தலைமைகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு ஒவ்வொரு சுற்றாக காய்களை நகர்த்தி கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கருணாவின் வளர்ச்சியை முடக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் போன்றறோர் சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிறு துரும்புக்கு சமம் என்பதையும் தங்களது தேவைகள் முடிந்தவுடன் பிள்ளையானது வரலாற்றையே முடித்து விடுவார்கள் என்பதையும் உணர்ந்துகொண்டு சிறிலங்கா அரசின் நயவஞ்சகங்களில் சிக்குண்டிருக்கும் பிள்ளையான் அவற்றிலிருந்து தன்னை முற்று முழுதாக விடுவித்து எம் தேசத்தை மேலும் அழிவுக்குள் இட்டுச்செல்லும் பாதையிலிருந்து விலத்திக் கொள்வதுடன் தன்னையும் பாதுகாத்து கொள்வதுடன் அனைத்து ரிஎம்விபி உறுப்பினர்களையும் உள்ளிணைத்து கிழக்கு மக்களுக்காக செயற்படுவதே சிறந்ததாகும். –அதிரடிக்காக… பீமன்
aniflower-star.gifநன்றி:- அதிரடி இணையம் WWW.ATHIRADY.COM

karuna-pillaiyan.jpg
tmvpthilipan2.jpg
tmvpkaruna-pillaiyan-iniyaparathinew1.jpg
tmvpkaruna-pillaiyannew.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மகிந்தபுர “டக்ளஸ்புர” வாக இருக்க வேண்டுமாம்!! – ஐனாதிபதி மகிந்த
Next post ரூ.மூன்று லட்சம் கொடுத்தால் பைலட் லைசென்ஸ் விமானம் ஓட்டவே வேணாம்…