தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை!!

Read Time:2 Minute, 5 Second

745269436swamyஇலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

டில்லியில் இருந்து சென்னைவந்த அவர் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் வெளிநாட்டு கொள்கையில் தமிழக அரசு தலையிட அதிகாரம் இல்லை. நான் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினேன்.

அப்போது இலங்கையில் சர்வதேச விசாரணை எதுவும் தேவையில்லை என அங்குள்ள தமிழ் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன. மேலும் உள்நாட்டு விசாரணை குழுவில் வெளிநாட்டினர் இடம் பெறலாம் என்றும் ரணில் ஆலோசனை தெரிவித்தார். என்று கூறினார்.

மேலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்தது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் நண்பர் என்ற முறையில் சந்தித்து பேசினேன். கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை.

பீகார் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் தான் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்யப்படும். என்று அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது இணக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!!
Next post இறுதி யுத்தத்தில் 7,700 பேரே பலியாகினர்!!