மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ டிரைவர் கைது

Read Time:2 Minute, 3 Second

நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை செகரட்டேரியட் காலனி நம்மாழ்வார்பேட்டையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அருகில் உள்ள கடைக்காரர்கள், வீட்டில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். சாலையோரம் ஆட்டோவில் 18 வயதுள்ள இளம்பெண்ணிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த ஆசாமியை மடக்கிப் பிடித்து இளம்பெண்ணை மீட்டனர். பிடிபட்டவர் பெயர் ஆனந்தன் (45), ஆட்டோ டிரைவர். நம்மாழ்வார்பேட்டையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் ஆட்டோவில் வந்த ஆனந்தன் நைசாக பேசி விபசாரத்துக்கு அழைத்துள்ளார். அந்தப் பெண்ணும் சரி என்று கூறி ஆட்டோவில் ஏறியுள்ளார். பின்னர் அவரிடம் உல்லாசமாக இருக்க முயற்சித்தபோது, பயத்தில் அந்தப் பெண் அலறியதால் மக்கள் திரண்டு வந்துள்ளனர். அந்தப் பெண் சாலிகிராமம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரது பெற்றோரை வரவழைத்து பெண்ணை ஒப்படைத்தனர். ஆனந்தனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரூ.மூன்று லட்சம் கொடுத்தால் பைலட் லைசென்ஸ் விமானம் ஓட்டவே வேணாம்…
Next post கவர்ச்சியாக வந்த செல்சியை பற்றி `கமென்ட்’ ஜிம்பாப்வே இளைஞருடன் ஹாரி மோதல்