டெல்லியில் காரில் கடத்தப்பட்டு பெண் கற்பழிப்பு: 5 பேர் கைது!!

Read Time:1 Minute, 36 Second

54017965-2129-45a6-a869-060134e49368_S_secvpfடெல்லியில், நேற்றுமுன்தினம் அதிகாலையில், 37 வயதான ஒரு பெண், காரில் கடத்திச் செல்லப்பட்டு, 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவர், கணவரைப் பிரிந்து, மேற்கு டெல்லியில் சாகர்பூர் என்ற இடத்தில் தன்னுடைய 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். வீடு அருகே உள்ள மார்க்கெட்டுக்கு அவர் சென்றபோது, ஒரு கால் டாக்சி வந்து நின்றது. அதன் பின்இருக்கையில் இருந்த 2 பேர், அப்பெண் மீது பாய்ந்து அவரை காருக்குள் இழுத்துப் போட்டனர். அதன் டிரைவர், அவருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்.

3 பேரும் அவரை காரில் கடத்திச் சென்றனர். 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பஞ்சர் கடைக்கு கார் சென்றது. அங்கு ஏற்கனவே 2 பேர் காத்திருந்தனர். அவர்களும், காரில் கடத்திய 3 பேரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டாக கற்பழித்தனர். பின்னர், போலீசுக்கு செல்லக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் பற்றி அப்பெண், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கார் டிரைவர்கள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் இரும்புக்கம்பி: பக்தர் அதிர்ச்சி!!
Next post ஆஸ்பத்திரியில் எலி கடித்து குழந்தை சாவு: எலிக்கு வைத்த பொறியில் பாம்பு சிக்கியது!!