பைனான்சியரிடம் பணம், செல்போனை பறித்த பீகார் வாலிபர் கைது போலீசார் விரட்டி பிடித்தனர்…!!!

Read Time:2 Minute, 20 Second

pol00029.gifசென்னையில் பைனான்சியரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற பீகார் வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். ஜக்கர்ராஜ் சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ஜக்கர்ராஜ். பைனான்சியரான இவர், தொழில் விஷயமாக சென்னை தங்கசாலைக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஜெயின் கோவிலுக்கு போய்விட்டு வரும்போது மர்ம ஆசாமி ஒருவன், அவர் வைத்திருந்த பை ஒன்றை பிடுங்கி கொண்டு தப்பி ஓடினான். அவர் திருடன், திருடன் என்று கூச்சல்போட்டபடி பின்னால் விரட்டி சென்றார். அப்போது அங்கு ரோந்து வந்த யானைக்கவுனி போலீசாரும் கொள்ளையனை விரட்டினார்கள். போலீசாரும், பொதுமக்களும் நீண்ட தூரம் விரட்டிச்சென்று அந்த கொள்ளையனை மடக்கி பிடித்தனர். உதவி கமிஷனர் பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். பீகார் வாலிபர் கொள்ளையன் வைத்திருந்த பணம் மற்றும் 2 செல்போன்களையும் போலீசார் மீட்டனர். கொள்ளையன் பெயர் ஜாகித்குமார் (வயது 20). பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த இவன், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தான். பழைய குற்றவாளியான இவன், சென்னைக்கு உறவினர் வீëட்டுக்கு வந்த இடத்தில் தனது கொள்ளை தொழிலை அரங்கேற்றிவிட்டான். இவனை, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பினார்கள். கொள்ளையன் ஜாகித்குமார் கூட்ட நெரிசலில் சாதுர்யமாக கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவன் ஆவான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரூ.50 லட்சம் தராவிட்டால் கல்லூரி மாணவிகளை கடத்த போவதாக மிரட்டல் போலீசார் மாறுவேடத்தில் சென்று வாலிபரை கைது செய்தனர்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…