சரணடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் விளக்கமறியலில்!!

Read Time:1 Minute, 10 Second

414910978Untitled-1வவுனியாவில் புதையல் தேடிய சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸாநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் நேற்று இரவு சட்டத்தரணியூடாக பொலிஸில் சரணடைந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இதன்படி இவரை கோட்டை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 23ம் திகதி மீண்டும் சந்தேகநபரை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இதன்போது நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பது குறித்துக் கவலை!!
Next post வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்!!