இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பது குறித்துக் கவலை!!

Read Time:2 Minute, 11 Second

480434544Untitled-1இலங்கையில் சிறார்கள் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்துவருவது குறித்து நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் செப்டம்பர் வரையிலான காலப் பகுதிக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக 6500க்கும் அதிகமான புகார்கள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரா பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதுபோல 8,000 புகார்கள் வந்ததாகத் தெரிவித்த, நடாஷா பாலேந்திரா புகார்களை மாத்திரம் வைத்துக்கொண்டு இந்த ஆண்டு குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளது என்ற முடிவிற்குவர முடியாது என கூறினார்.

இம்மாதிரியான சம்பவங்களில் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு சராசரியாக 8 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதால் பெரிய அளவில் வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, இவ்வாறான வழக்குகள் மீது விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும் கட்டமைப்பு ஒன்றை பரிந்துரை செய்துள்ளதாகவும் நடாஷா பாலேந்திரா குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக சிறுவர்களை அவர்களது சமுதாயமே பாதுகாக்கும் வகையில் சமுதாய மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு!!
Next post சரணடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் விளக்கமறியலில்!!