பாகிஸ்தான் மந்திரி வீட்டில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி
பாகிஸ்தான் மந்திரி வீட்டில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இத்தாக்குதலில் மந்திரி காயமின்றி உயிர் தப்பினார். மனித வெடிகுண்டு: பாகிஸ்தானில் தலீபான் ஆதரவு தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்காக, நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஒரு பாகிஸ்தான் மந்திரியை கொலை செய்ய முயற்சி நடந்தது. பாகிஸ்தான் அரசியல் விவகாரத்துறை மந்திரி அமிர் முகம். இவர் ஆளுங்கட்சியின் வடமேற்கு எல்லைப்புற மாகாண தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பெஷாவர் நகரில் உள்ளது. இவரது வீட்டு வளாகத்துக்குள் மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் நுழைந்தான். 4 பேர் பலி அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அந்த நபரை மேற்கொண்டு முன்னேறி செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். உடனே, அந்த தீவிரவாதி தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கி வெடிக்க செய்தான். இதில் வீட்டில் இருந்த 2 பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் பலியானதாக பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான டெலிவிஷனில் அறிவிக்கப்பட்டது. ஆனால் போலீசாரோ இரண்டு பேர் மட்டுமே இறந்ததாக கூறினர்.
இந்த தாக்குதலில் மந்திரியின் அண்ணன் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
உயிர் தப்பினார்
சம்பவம் நடந்தபோது, மந்திரி அமிர் முகம், அந்த வீட்டில்தான் இருந்தார். நல்லவேளையாக, அவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் தனது 2 பாதுகாவலர்கள் இறந்து விட்டதாகவும், தனது அண்ணன் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே இரண்டு தடவை தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பி இருப்பதாகவும், எனவே, இந்த தாக்குதலை கண்டு பயப்பட மாட்டேன் என்றும் அமிர் முகம் தெரிவித்தார்.
இதற்கிடையே, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஸ்வாத் நகரில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...