ஜெனிவா அறிக்கை தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு அடுத்தவாரம்!!

Read Time:1 Minute, 28 Second

2013981886SLFPஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு பற்றி ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு கட்சியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

அந்தக் குழு ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து, கட்சிக்கு அறிக்கை சமர்பித்ததன் பின்னர் எமது கட்சியின் நிலைப்பாடு பற்றி அறிவிப்பதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை வருகிறார் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர்!!
Next post அடுத்த வருடம் உள்ளூராட்சி தேர்தல்; தொகுதி வாரியாகவே நடைபெறும்!!