விபத்தில் 6 வயது சிறுமிக்கு பலத்த காயம்!!

Read Time:1 Minute, 24 Second

499516504Accidentதிருகோணமலை, மகாதிவுள்வெள விகாரைக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (18) மாலை நடந்து விபத்தொன்றில் ஆறு வயது சிறுமி படுகாயமுற்றுள்ளர்.

குறித்த சிறுமி மீது கார் மோதிய நிலையிலேயே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

உடனடியாக மகாதிவுள்வெள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறுமி, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

மகாதிவுள்வெள பகுதியைச் சேர்ந்த துமிதி நிக்லேசா (வயது 06) எனும் சிறுமியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சிறுமியின் வீட்டுக்கு முன்னாலுள்ள பௌத்த விகாரைக்கு சென்று வீடு திரும்புகையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மொறவெள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு பயங்கர நிலையிலிருந்து விடுபட்டுள்ளது – பிரதமர் ரணில்!!
Next post கலப்பு விசாரணை மேற்கொள்ள முடியாது!!