ஐ.நா. அறிக்கை தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை – அரசாங்கம்!!

Read Time:1 Minute, 38 Second

910115826Rajithaஇலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இறுதி அறிக்கை எதிர்வரும் 24ம் திகதி வௌியாகும் வரை எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியதென்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தினால் மனித உரிமைகள் தொடர்பாக நேற்று வௌியிடப்பட்ட அறிக்கையை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

போர்க்குற்றம் தொடர்பாக யாருடைய பெயர்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி குறித்து அந்த அறிக்கையில் புகழப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரண பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு!!
Next post கண்டியில் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு!!