ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில்: 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Read Time:1 Minute, 25 Second

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் துபாயில் உள்ள மிகப்பெரிய கட்டுமான கம்பெனியில் வேலை செய்யும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். சம்பள உயர்வு, குடியிருப்பில் கூடுதல் வசதிகள் கோரி இந்த வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. அந்த நாடு முழுவதும் உள்ள 36 தொழிலாளர் முகாம்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் 2,000 ரூபாய் கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கேட்டு வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். அந்த கட்டுமான கம்பெனி உடனடியாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தர முன்வந்து உள்ளது. அதை ஏற்க தொழிலாளர்கள் மறுத்து விட்டனர். வேலைநிறுத்தத்தை தொடர்ந்து கட்டுமானத்துறையில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களின் சம்பளம் பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தீபாவளி அன்று ஒரே நாளில் ரூ. 60 கோடி சரக்கு விற்பனை * தமிழகத்தில் இதுவரை இல்லாத சாதனை!!
Next post உடலில் நாகதேவி இறங்கிவிட்டதாக உயிருடன் இளம்பெண் சமாதி