மரண பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு!!

Read Time:2 Minute, 32 Second

200913161law2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவு செய்தல் (தற்காலிக நடைமுறை) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பத்தாட்சி மற்றும் இறப்பத்தாட்சி படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் இறப்பத்தாட்சிபடுத்தும் அதிகாரத்தை பதிவத்தாட்சி ஆணையாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது.

எனினும் பயங்கரவாததாக்குதல், மக்கள் புரட்சி மற்றும் இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் திடீர் மரணம் சம்பவிக்கும் நபர்களின் உடலினை இனங்கண்டுக்கொள்ள முடியாதபோது அவர்களினை பதிவுசெய்வது தொடர்பான நடைமுறைகள் குறித்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

இதற்கு சிறந்த தீர்வாகவே 2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பத்தாட்சிப்படுத்தும் (தற்காலிக நடைமுறை) சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

எனினும் சில காரணங்களால் குறித்த நபர் மரணிக்கவில்லை என குடும்பத்தார் தெரிவிக்கும் போது மேற்படி காணாமல் மரணமாக அதனை பதிவுசெய்ய முடியாது.

இதனால் மரணித்தவர்களின் குடும்பத்தாருக்கு கிடைக்கபட வேண்டிய உரித்துகள் எவற்றையும் பெற்றுக் கொள் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இது தொடர்பில் சர்வதேச நாடுகளில் வழங்கப்படுகின்ற காணாமல் போன நபர் அல்லது மரணித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் ´காணாமல் போயுள்ளதாக உறுதிப்படுத்தும் சான்றிதழ் (Certificate of Absence) மற்றும் அதற்கு ஒப்பான சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கு ஏதுவாக அமையும் படி 2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பத்தாட்சிபடுத்தும் (தற்காலிக நடைமுறை) சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திவுலப்பிட்டிய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!!
Next post ஐ.நா. அறிக்கை தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை – அரசாங்கம்!!