சுஜீவ சேனசிங்கவின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது!!

Read Time:1 Minute, 37 Second

2122739261sujeewa2சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவினால் முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை தொடர்வதற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த தேர்தல் தினங்களில் ஹோமாகம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் காரணமாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக கூறி குறித்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, சுஜீவ சேனசிங்கவினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக ஹோமாகம நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இரத்து செய்வதாகவும், சுஜீவ சேனசிங்கவினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து விசாரணை செய்வதாகவும் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலப்பு விசாரணையில் நம்பிக்கையில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்!!
Next post இந்திய – இலங்கை மேம்படும் – பிரணாப் முகர்ஜி!!