அமெரிக்க வாழ்க்கை, கைநிறைய சம்பளம் கிடைத்தும் வெறுமை உணர்வால் துறவறம் பூண்ட ஆடை வடிவமைப்பாளர்!!

Read Time:3 Minute, 31 Second

65d38054-6729-4abb-9fa3-86df103cb21f_S_secvpfஅமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த நிஷா கப்பாஷி தனது கனவுத் துறையான ஆடை வடிவமைப்பில், கைநிறைய சம்பளம் கிடைத்தும், வெறுமை உணர்வால் தவித்துவந்தபோது, அதைப்போக்கி நிம்மதியளித்த இந்தியாவின் பழமையான மதங்களில் ஒன்றான ஜைன மதத்தின் கன்னியாஸ்திரியாக சமீபத்தில் மாறினார்.

இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த, நிஷா கப்பாஷியின் குடும்பம் அவர் பிறப்புக்கு முன்பிலிருந்தே அமெரிக்காவில் வசித்து வந்தனர். நிஷாவுக்கு, சிறு வயதிலிருந்து பேஷன் மீது இருந்த ஆர்வத்தால், அதைப் பற்றியே படித்து, 23 வயதில் நியூயார்க் நகரின் பிரபல நிறுவனத்தில் பெரிய பதவியிலும் வேலைக்கு சேர்ந்தார். பிடித்த வேலை, நண்பர்கள், விருப்பமான உணவு என எந்த குறையும் இல்லாத வாழ்வில் திடீரென வெறுமையை உணரத் தொடங்கினார் நிஷா.

எல்லாம் இருந்தும் ஏன் மகிழ்ச்சி இல்லை? ஆசைப்பட்ட வேலையிலும், வெறுமையை உணரக் காரணம் என்ன? எனத் தேட தொடங்கிய நிஷா ஜைன மதம் பற்றி கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவில் கற்கத் தொடங்கினார். அதில் கிடைத்த நிம்மதி அவரை இந்தியாவுக்கே அழைத்து வந்தது. ஜைன கன்னியாஸ்திரியாக விரும்பிய அவர் அதுபற்றி இந்தியாவில் படிக்கத் தொடங்கினார்.

திருமணம் செய்யும் மணமகள்போல அலங்காரத்துடன் ஜைன தத்துவத்தை சமீபத்தில் தனது முப்பது வயதில் நிஷா, மணந்துகொண்டார். ஒவ்வொரு நாளும் தொன்னூறு நிமிட தியானம், பதினைந்து மணிநேர சமண தத்துவம், ஆறு மணிநேர உறக்கம், வெறும் காலில் நடை, சொத்து என சொல்லிக் கொள்ள பரங்கியினால் உணவு உண்ணும் கின்னம், தண்ணீர் குவளை மற்றும் போகும் பாதையில் எந்த உயிரையும் மிதித்து கொல்லாமல் இருக்க ‘ஓகோ’ என்கிற துணியால் ஆன துடைப்பான் ஆகியவற்றைக் கொண்ட எளிமையான வாழ்வை வாழ்கிறார்.

கையில் பணமின்றி, ஒரு வங்கிக் கணக்குமின்றி நாடோடியான இந்த வாழ்க்கையில் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சி, முன்னர் தன்னிடம் குடிகொண்டிருந்த வெறுமை உணர்வை விரட்டியடித்துள்ளதாக நிஷா கூறுகிறார்.

ஜைன மதத்தில் மொட்டை அடிக்கும்போது பேன்கள் கொல்லப்படலாம் என்கிற எண்ணத்தால், தலைமுடியை ஒவ்வொன்றாக பிடுங்கி எறியும் சம்பிரதாயம் உள்ளது. இதன்மூலம், பிற உயிர்களை அந்த மதம் மதிக்கும் விதத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை!!
Next post இது விபத்தா? கொலையா?