பாராளுமன்றத்தை துறந்து முதலமைச்சர் ஆனார் சாமர!!

Read Time:1 Minute, 36 Second

1707933599Untitled-1ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரீண் பெர்ணான்டோ கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட முதலமைச்சர் பதவி வெற்றிடத்திற்கு சாமர சம்பத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 64,418 விருப்பு வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றிருந்தார்.

எதுஎவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சாமர ஊவா முதலமைச்சாராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் தோல்வியைத் தழுவிய லக்ஷ்மன் செனவிரத்ன (42,354 விருப்பு வாக்குகள்) பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படலாம் என தகவல்கள் வௌியாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்தில் கரையொதுங்கிய மர்மப் படகு – இலங்கையைச் சேர்ந்ததா?
Next post தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி – திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்!!