இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்!!

Read Time:1 Minute, 39 Second

2131377165Untitled-11இலங்கை இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அனைத்து நாடுகளும் ஐ.நா.சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் மதிமுகவின் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி ஆகியோர் விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி செய்தியாளர்களிடம் பேசிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார் என, தமிழக ஊடகமான தினமணி செய்தி வௌியிட்டுள்ளது.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த 2009-ஆம் இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலையாகும். இதுதொடர்பாக இலங்கையின் உள்நாட்டு விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது.

உலக நாடுகள் அனைத்தும், இலங்கை இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா.சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திக்க குணவர்த்தன காலமானார்!!
Next post புனித ஹச் பெருநாள் ​24ம் திகதி!!